மன்னிப்பா? நிர்பயாவையை கொன்ற கொலையாளிகளை மன்னித்து விடுதலை செய்யவேண்டும் எனக்கூறிய இந்திரா ஜெய்சிங் கருத்திற்கு கடுங்கோபம் தெரிவித்தார் ஆஷாதேவி.
நிர்பயா கூட்டுப் பலாத்காரம்
உலகையே உலுக்கியது நிர்பயா என்ற 23 வயது மருத்துவ மாணவியின் மரணம். 2012-ல் ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார்.
6 பேர் கொண்ட கும்பல் இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியது. இதில் பாதிக்கப்பட்ட நிர்பயா டிசம்பர் 29-ல் உயிரிழந்தார்.
தள்ளிச்சென்ற தூக்கு தண்டனை
முகேஷ்சிங், வினய் ஷர்மா, பவன்குப்தா, அக்சய்குமார் இக்குற்றத்தை செய்தவர்கள். இவர்களுக்கு முதலில் ஜனவரி 22-ம் தேதி மரண தண்டனை வழங்கப்பட்டது.
பின்னர் குற்றவாளிகளின் மறுசீராய்வு மனுவால் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியாக வினய்ஷர்மா கருணை மனுவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தள்ளிப்படி செய்தார்.
இதையடுத்து நீதிபதி சதீஷ்குமார் அரோரா வெள்ளி அன்று அவர்கள் நால்வருக்கும் பிப்ரவரி முதல் தேதி மாலை 6 மணிக்கு மரணதண்டனை நிறைவேற்ற தீர்ப்பு வழங்கினார்.
இந்திரா ஜெய்சிங் ட்விட்
இதற்கிடையில் இந்திரா ஜெய்சிங், (முதன்மை வக்கீல்) ஆஷாதேவி குற்றவாளிகளை மன்னித்து அவர்களை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று தனது கருத்தை ட்விட் செய்துள்ளார்.
மேலும், அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தன் கணவரை கொலை செய்த நளினி மற்றும் அவர் கணவர் முருகனை சோனியா காந்தி மன்னித்து வெளியே விடும்படி சொல்வது போல, ஆஷா தேவியும் குற்றவாளிகளை மன்னித்து அவர்களின் தண்டனையை தடுக்குமாறும் கூறியுள்ளார்.
ஆஷாதேவி கடுங்கோபம்
இந்திரா ஜெய்சிங்கின் ட்விட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் ஆஷாதேவியும் பதில் ட்விட் வெளியிட்டார்
அதில் அவர் குறிப்பிட்டதாவது, மன்னிப்பா? இவர் யார் என்னை முடிவெடுக்கச் சொல்ல என்பது போன்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
இந்திரா ஜெய்சிங் போன்று குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களுக்கும் சேர்த்து தனது கண்டங்களையும் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா அல்லது மேலும் சில காரணங்களால் தள்ளிப்போகுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.