சபானா ஆஸ்மி: ஐந்து முறை தேசிய விருது வென்ற நடிகை படுகாயம். கார், லாரி நேருக்குநேர் மோதியதில் நடிகை மற்றும் டிரைவர் படுகாயம்.
இந்தி நடிகை சபானா ஆஸ்மி (69) மற்றும் அவரது கார் டிரைவர் இருவரும் விபத்தில் காயம் அடைந்தனர். சபானாவின் கணவர் வேறு வாகனத்தில் வந்ததால் அவர் பத்திரமாக இருப்பதாக தெரிவித்தார்.
கார் மற்றும் லாரி மோதல்
இந்தி நடிகை சபானா தனது சபாரி காரில் மராட்டியத்தின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மும்பை-பூனே விரைவு சாலையில் வழியாக, மும்பையில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள காலாப்பூர் என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது முன்னே சென்ற தனது கணவரின் ஆடி காரை முந்திச்செல்ல முயன்றபோது முன்சென்ற லாரி மீது மோதியது.
எம்ஜிஎம் மருத்துவமனை
விபத்தில் இருந்து உடனடியாக மீட்கப்பட்ட நடிகை மற்றும் அவரது கார் டிரைவர் நவி மும்பையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
படுகாயம் அடைந்த சபானா
இன்று மாலை 3.30 மணியில் நடந்த இந்த விபத்தில் சபானா ஆஸ்மிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. டிரைவருக்கு பின் கண்ணாடி அருகில் அமர்ந்து இருந்ததால் முகம், கழுத்து, கன்னம், மற்றும் கண்ணின் அருகே காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐந்து முறை தேசிய விருது
சபானா ஆஸ்மி ஐந்து முறை தேசிய விருதினை பெற்றுள்ளார். மற்றும் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார்.
சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது, சிறந்த துணை நடிகைக்கான விருது மற்றும் பல சர்வதேச விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.