ஒரிசாவில் சுகாதாரத்துறை பணியாளர்கள் மகிழ்ச்சியாகும் விதமாக மிகப்பெரிய சலுகையை அறிவித்து உள்ளார் அந்த மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் சுய ஊரடங்கு உத்தரவை நேற்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் பல நடவடிக்கைகளை இந்தியா அரசு எடுத்து வருகிறது.
மக்கள் சுய கட்டுப்பாடுகளையும், சமூக விலகலையும் பின்பற்ற வேண்டும் என்று நேற்று மோடி தொலைக்காட்சியில் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொருளாதாரம் பின்னோக்கி சென்றாலும் பரவாயில்லை எனக்கு ஒவ்வொரு நாட்டு மக்களும் முக்கியம் என்றார்.
தற்போது ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக், அந்த மாநிலத்தின் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு மிகப்பெரிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளார்
ஒடிசாவில் பணியாற்றும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பே வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
சுகாதாரத் துறை பணியாளர்கள் தான் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க தற்போது நாட்டு மக்களுக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் சந்தோஷப்படும் விதத்தில் ஒரிசா முதல்வர் அறிவித்துள்ளது, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.