புதுடெல்லி: கொரோனா ஊரடங்கினால் பல நாட்கள் உள்நாட்டு விமான சேவை இயக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் உள்நாட்டு விமானங்கள் இன்று முதல் இயக்கப்படும் எனவும் ஆனால் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்திற்கு பின் கொரோனா அறிகுறி இருந்தால் தெரிவிக்க வேண்டும்
உள்நாட்டு விமான சேவையை பயண்படுத்துபவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதேனும் இருந்தால் உடனியாக மாவட்ட கொரோனா கண்கானிப்பு அதிகாரியிடமோ அல்லது மாநில/தேசிய உதவி மையங்களுக்கு தொலை பேசி அழைப்பு மூலம் தெரியப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள் சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது
உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது, மாநிலங்களுக்கு இடையே பேருந்தில் பயணம் செய்வது மற்றும் தொடர்வண்டியில் பயணம் செய்வது போன்றவர்களுக்கான விதிமுறைகள் சுகாதார அமைச்சகத்தால் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் பயணிகள், “கண்டிப்பாக 14 ன்கு நாட்கள் தனிமை படுத்தப்பட வேண்டும் எனவும், இதில் 7 நாட்கள் சுயமாக பணம் செலுத்தியும் மற்றும் மீதம் 7 நாட்கள் தங்களது வீட்டிலும், உடல் நலத்தை கவனித்தபடி இருக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரசவம், குடும்பத்தினர் இறப்பு, தீவிர உடல்நலக்குறைவு மற்றும் 10 வயதிற்கும் குறைவான குழந்தைகளை வைத்திருப்பவர்கள் ஆகியவர்கள் மட்டும் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட அனுமதிக்கப்படுவர்.
ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் விமான சேவை இயக்கப்படும் என தெரிகிறது.