பெங்களூரூ: கர்நாடகா அரசு சனிக்கிழமை விரைவில் குணப்படுத்தக்கூடிய கன்வாலெஸ்கண்ட் பிளாஸ்மா தெரபி(convalescent plasma therapy) எனும் சிகிச்சை முறையை கொரோனா திவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சோதனை முயற்சியாக செயல்படுத்த துவங்கியது.
விரைவில் குணம்
மருத்துவ கல்வி அமைச்சர் கே. சுதாகர் ட்விட்டரில் தெரிவிக்கையில் ” நாங்கள்
கன்வாலெஸ்கண்ட் பிளாஸ்மா தெரபி(CPT) சிகிச்சைமுறையை கொரோனா தீவிரமாக பாதித்த நோயாளிகளுக்கு துவங்க இருக்கிறோம் இது கொரோனா பாதிப்புகளை விரைவில் குணமடைய உதவி புரியும் என நிச்சயமாக நம்புகிறோம்”
மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த சிகிச்சை கொரோனாவால் தீவிரமாக பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும், தீவிர கண்கானிப்பில் இருக்கும் நோயாளிகளுக்கும், வெண்டிலேடரில் வைக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என தெரிவித்தார்.
இதற்கு நன்கொடை வழங்குபவர்களும் முன் வந்து உள்ளனர்.
கன்வாலெஸ்கண்ட் பிளாஸ்மா தெரபி
அதிகாரிகள் தெரிவித்தது என்னவென்றால், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் இதற்காக கொடை அளிக்க முன்வந்துள்ளனர், அவர்களின் உடலிருந்து எடுக்கப்படும் எதிர்ப்பாற்றல் புரதத்தை(ANTI-BODIES) கொரோனா தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த சிகிச்சைமுறையில் பயன்படுத்தப்படும்.
தற்போது 5 கொரோனா நோயாளிகள் தீவிர கண்கானிப்பு பிரிவில் வைக்கப்பட்டு உள்ளனர்.
சுகாதாரதுறை அமைச்சர் ஸ்ரீராமலு மேலும் தெரிவிக்கையில் இந்த கன்வாலெஸ்கண்ட் பிளாஸ்மா தெரபி(CPT) சிகிச்சை முறை கொரோனாவை ஒழிப்பதில் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என தெரிவித்தார்.
கர்நாடகம் முன் மாதிரி மாநிலம்
“இந்த கன்வாலெஸ்கண்ட் பிளாஸ்மா தெராபி(CPT) சிகிச்சை முறையை கொரோனா தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாலிகளின் சிகிச்சையில் அமல் படுத்துவதில் கர்நாடகம் முன் மாதிரி மாநிலமாக செயல்படுகிறது. பி.எம்.சி விக்டோரியா(BMC VICTORIA) மருத்துவமனை இதற்கான முதற்படியை எடுத்து வைத்துள்ளது, நாங்கள் இந்த மனித குலத்திற்கான எதிரியை ஒழிப்பதற்கு தீவிர முடிவெடுத்துள்ளோம்” என அவர் அந்த ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.