ஸ்ரீபெரும்புதூர்: தந்தை நினைவிடத்திற்கு பிரியங்கா வருகை!
பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநிலக் கிழக்கு பகுதி பொதுச்செயலாளராகப் பொறுப்பெற்று உள்ளார்.
பிரியங்கா காந்தியை கட்சி தொண்டர்கள் ஜிந்தாபாத் என்ற கோசத்துடன் பதவி ஏற்க வரவேற்றனர். பதவியேற்றப்பின் தன்னுடைய அறைக்குச் சென்று கட்சிப் பணிகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில் பிரியங்காவும், ராகுலும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவர்களுடைய தந்தை ராஜீவ்காந்தியின் நினைவிடத்திற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவரிடம் ஆசிபெற்று நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளனராம்.