கரோனா வைரஸ் காரணமாக உலகப் பொருளாதாரம் சரிந்து உள்ள நிலையில் அதை மீட்டெடுக்க ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதி மையம் அமைத்துள்ள குழுவில் இந்தியாவின் முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் இடம் பெற்றுள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா தற்போது உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
அமெரிக்கா இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது. பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளும் இந்த வைரஸால் அதிக பாதிப்புகளையும் இழப்புகளையும் சந்தித்து வருகிறது.
இதனால் இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியில் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்படைந்துள்ளது.
உலகம் முழுவதும் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
இதை மீட்டெடுக்கும் பொறுப்பில் ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியம் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆலோசனை வழங்க 11 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
அதில் சிறந்த பொருளாதார நிபுணர்களை நியமித்துள்ளது. அதன்படி இந்தியாவில் 2016ம் ஆண்டு வரை ரிசர்வ் வங்கி தலைவராக இருந்த ரகுராம் ராஜனும் இந்த குழுவில் நியமித்துள்ளது.
இவரின் காலகட்டத்தின் போது இந்தியா பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது.
பிரதமர் மோடி 1000 மற்றும் 500 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த போது அதை எதிர்த்து குரல் கொடுத்தவர் இந்த ரகுராம்ராஜன்.
தற்போது சிகாகோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரைத் தவிர சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்.
இதற்கிடையே ரகுராம் ராஜன், ஆலோசனை தேவைப்பட்டால், இந்தியாவுக்கு வந்து பொருளாதாரத்தில் ஆலோசனை வழங்க தயாராக உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.