தோல்வி பயம்: ராகுலைப் பார்த்து பயப்படும் பாஜக!
ராகுல்காந்தியை, ஒரு தமிழ் சிறுமி கேள்வி கேட்டு மிரள வைத்ததாகவும், அவர் சிவகங்கையைச் சேர்ந்த சிறுமி.
இச்செய்தி ஆங்கில ஊடகங்கள் முதல், தமிழ் ஊடங்கள் வரை பகிரப்பட்டது. ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தியை எப்படி முன்னணி ஊடகங்கள் பகிர்ந்தன.
பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள், ராகுல்காந்தி பேசிய அரங்கில் உள்ளனர். பல தலைவர்கள் அமர்ந்துள்ளனர்.
பல்வேறு ஊடகங்கள் அங்கு வந்துள்ளனர். இவர்களையும் மீறி, இவர்கள் கண்ணில்படாமல், ஒரு சிறுமி ராகுல் காந்தியைக் கேள்வி கேட்டுள்ளது.
அந்த நேரலையை நிறுத்தி விட்டார்களாம். எப்படி இது சாத்தியம்? மொபைல் இல்லாத நபர் துபாயில் உண்டா?
சிறுமியின் உறவினர்கள் அவள் பேசியதை வீடியோ எடுக்கவில்லையா. ஒரு ஊடகம் கூட இதைக் கவனிக்கவில்லையா?
இப்படிச் சாதாரணமானவர்களுக்கே இவ்வளவு கேள்விகள் மனதிற்குள் தோன்றுகின்றது. ஆனால், முன்னணி ஊடகங்கள் போலியான செய்தி எனத் தெரிந்துகொண்டே அதை வெளியிட்டுள்ளனர்.
முதலில் இந்த வீடியோவைப் பாருங்கள் உண்மை என்ன என்பது புரியவரும்.
இப்படி ஒரு போலிச்செய்தியை பரப்பியது முழுக்க முழுக்க பாஜகவும், ஒரு சமூக அமைப்பினைச் சேர்ந்தவர்கள் என தற்பொழுது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
மேல் சமூக அமைப்பினருக்கு சாதகமான இட ஒதுக்கிட்டை பாஜக அறிவித்துள்ளது. அதை தக்கவைத்துக்கொள்ள மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே முடியும்.
எனவே, பாஜகவை எப்படியாவது ஆட்சிக்கு கொண்டுவர நினைத்ததின் விளைவே இப்படி போலிச் செய்திகளை வெளியிடத் தூண்டியுள்ளது.
மேலும், அந்த ஊடகங்கள் இதுவரை மறுப்பு செய்தி வெளியிடவில்லை. காரணம், செய்திவெளியிட்ட அனைத்து ஊடகங்களிலுமே பணிபுரிவது ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
திட்டமிட்டு பரப்பப்பட்ட செய்திக்கு எப்படி மறுப்பு தெரிவிப்பார்கள்? அப்படியே தெரிவித்தாலும் ஏதாவது ஒரு மூலையில் துணுக்குச் செய்தியாகப் போடுவார்கள்.