Home நிகழ்வுகள் தோனியும் ரசிகையும்: ஆஸ்திரேலியாவில் நடந்த அற்புதம்!

தோனியும் ரசிகையும்: ஆஸ்திரேலியாவில் நடந்த அற்புதம்!

0
603
தோனியும் ரசிகையும்

தோனியும் ரசிகையும்: ஆஸ்திரேலியாவில் நடந்த அற்புதம்!

தோனியின் மிகப்பெரிய ரசிகை 87 வயதான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எடித் நார்மன். மூதாட்டியிடம் தோனி நடந்து கொண்ட விதம் அனைவராலும் ரசிக்கும்படி இருந்தது.

முன்னாள் இந்தியா அணியின் கேப்டன் தோனி, பணிவுக்கும், அன்புக்கும், அடக்கத்திற்கும் பெயர் போனவர் என்பது அனைவரும் அறிந்ததே.

இதன் காரணமாகவே “கேப்டன் கூல்” என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டார்.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடச் சென்றது.

டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இந்திய அணி வீரர்கள் சிட்னி மைதானத்தில் வலைப்பயிற்சி செய்துகொண்டு இருக்கும்போது 87 வயதான ‘எடித் நார்மன்’ என்ற மூதாட்டி தோனியைக் காண மகனுடன் மைதானத்திற்கு வந்திருந்தார்.

தோனிக்கு தகவல் தெரிந்ததும் இருவரும் உட்கார்ந்து நீண்ட நேரம் உரையாடிக்கொண்டு இருந்துள்ளார்கள்.

இருவர் முகத்திலும் புன்னகை மலர்ந்துகொண்டே இருந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணயத்தில் வைரலாகி வருகின்றது.

நார்மன் கூறியதாவது, “நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக என்னை உணர்கிறேன் எந்த தடையும் இன்றி தோனியுடன் உரிமையுடன் பேசியதாக உணர்கிறேன்” என்று கூறினார்.

இது குறித்து நார்மன் மகன் கூறியதாவது, “இது மிகவும் சிறப்பான ஒரு நிகழ்வு. கிரிக்கெட் சாம்பவான் டான் பிராட்மேன் காலத்திலிருந்து கிரிக்கெட் பார்த்து வரும் என் தாய், இப்பொழுது விளையாடும் ஒரு கிரிக்கெட் வீரரின் மிகப்பெரிய ரசிகையாக இருப்பது ஆச்சரியமான ஒன்று எனக் கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here