புல்வாமா தாக்குதலில் பயன்படுத்திய வாகனத்தின் ஒனர் கண்டுபிடிப்பு
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தீவிரவாத தாக்குதலால் புல்வாமா என்ற இடத்தில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் 78 வாகனங்களில், 2,500-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஸ்ரீநகரை நோக்கி அதிவேகமாகச் சென்றனர்.
முகாமை அடைய 30 கிலோமீட்டர் இருந்தபோது, 350 கிலோ எடையுடன் வெடிபொருட்களை ஏற்றி வந்த கார் ஒன்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் வந்த ஒரு வாகனத்தின் மீது மோதியது.
வெடிபொருள் நிரப்பப்பட அந்த வாகனத்தின் உரிமையாளர் கண்டறியப்பட்டார். ஆனத்னக் பிஜிபேர நகரத்தைச் சேர்ந்த 19 வயதான சஜாத் பாட் என்பவர் விபத்து நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்புதான் வாகனத்தை வாங்கியுள்ளார்.
இவரும் ஜெய் ஈஸ் மொஹம்மத் கூட்டத்தின் ஒருவர் என்று கருதப்படுகிறது. விபத்து நடந்த நாளில் இருந்தே தலைமறைவாகி விட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.
சிறு சிறு துண்டுகளாக நொறுங்கிய வாகனம் அனைத்தையும் சேர்த்து நேஷனல் இன்வேஷ்டிகேசன் ஏஜன்சி (National Investigation Agency) நடத்திய ஆய்வில் வாகனம் எண் இல்லாமல் ஒட்டி வரப்பட்டுள்ளது.
எக்கோ வேன் மாருதி சுசூக்கி என்றும் இதற்கு முன் 7 நபர்களிடம் கை மாறி இறுதியாக சஜாத் கைக்கு வந்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.
சிரஜ் அல் அலூம் என்ற பள்ளியில் பயின்று வந்த 19 வயது மாணவன் சஜாத் பாட் ஆவான். இந்த தாக்குதலில் வெடிபொருள் கொண்ட வாகனத்தை ஒட்டி சென்ற அதில் அகமேத் தார் 19 வயதுடையவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.