சினிமா பெண் இயக்குனர் மர்ம மரணம்
மலையாள சினிமாவின் இளம் வயது பெண் இயக்குனர் என்ற சிறப்பை பெற்றவர் நயனா சூரியன். வயது 28.
இவர் மகரமஞ்சு என்ற படத்தில் இயக்குனர் லெனின் ராஜேந்திரன் மூலம் உதவி இயக்குனராக அறிமுகம் செய்யப்பட்டவர்.
இவர் திருவனந்தபுரத்தில் உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
நயனா சூரியன் தனியாகவே வடிக்கை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நயனாவை நேற்று காலை அவருடைய தோழிகள் போனில் தொடர்புகொண்டுள்ளனர்.
ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. நீண்ட நேரம் அவர் பேனை எடுக்கவே இல்லை என்பதால் சந்தேகமடைந்த அவரது தோழிகள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் திருவனந்தபுரம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போலீசார் நயனாவின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். படுக்கை அறையில் இறந்த நிலையில் பிணமாகக் கிடந்தார்.
பின்னர் நயனாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.
இயக்குனர் நயனா சூரியன் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவருடைய தோழிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.