விஜய்மல்லையா நாடுகடத்தல்: நாளை மறுதினமா?
விஜய் மல்லையாவை நாடுகடத்த சம்மதம் தெரிவித்து கடந்த டிசம்பர் 10-ம் தேதி லண்டன் நீதிமன்றம் உறுதிசெய்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என லண்டன் நீதிமன்றம் 14 நாட்கள் விஜய் மல்லையாவிற்கு அவகாசம் கொடுத்தது.
14 நாட்களுக்குள், விஜய் மல்லையா எந்த மேல்முறையீடு மனுவையும் தாக்கல்செய்யவில்லை.
இதனால், விஜய்மல்லையா நாடுகடத்துவதற்கு சம்மதம் தெரிவித்ததாக லண்டன் நீதிமன்றம் பொருள்கொள்ளும்.
எனவே, 28 நாட்கள் கழித்து விஜய் மல்லையாவை நாடு கடத்துவது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என ஏற்கனவே அறிவித்தது.
நாளையுடன் தீர்ப்பு வழங்கி 28 நாட்கள் முடிவடைய உள்ளது. எனவே, விஜய் மல்லையா குறித்து முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாளை அல்லது நாளை மறுதினம் விஜய்மல்லையா, நாடுகடத்தப்படும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தப்பி ஓடிய பொருளாதாரக் குற்றவாளி
விஜய்மல்லையா வழக்கை விசாரித்து வந்த மும்பை நீதிமன்றம், விஜய்மல்லையாவை “தப்பி ஓடிய பொருளாதாரக் குற்றவாளி” என அறிவித்துள்ளது.
கடந்த வருடம்தான் இந்தச் சிறப்புச் சட்ட மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்ற கூடத்தொடரில் நிறைவேற்றியது.
இந்தச் சட்டத்தின் மூலம், முதலில் தண்டிக்கப்பட உள்ளவர் விஜய் மல்லையா. இந்தியாவின் முதல் தப்பி ஓடிய பொருளாதாரக் குற்றவாளி விஜய் மல்லையா ஆவார்.
இச்சட்டத்தின் மூலம், விஜய் மல்லையாவின் அனுமதியின்றி அவருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்துகொள்ளலாம்.
100 கேடிக்குமேல் கடன்மோசடி செய்துவிட்டு நாட்டைவிட்டுத் தப்பிக்கும் நபர்கள் அனைவருமே பொருளாதாரக் குற்றவாளி என அறிவிக்கப்படுவார்கள்.
எனவே, அவர்களுடைய சொத்துகளை எளிதில் அமலாக்கத்துறையினர் முடக்கி பறிமுதல் செய்யமுடியும்.
லண்டன் தீர்ப்பும், இந்தியத் தீர்ப்பும்
விஜய்மல்லையா இன்னும் சில தினங்களில் நாடுகடத்தப்பட உள்ளதாலேயே இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகைக்குள் விஜய்மல்லையா இந்தியாவில் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.