Home நிகழ்வுகள் உலகம் ஐபோன் மிஸ்: யோக டீச்சரின் அடாவடித்தனம்!

ஐபோன் மிஸ்: யோக டீச்சரின் அடாவடித்தனம்!

578
0
ஐபோன் மிஸ்

ஐபோன் மிஸ்: யோக டீச்சரின் அடாவடித்தனம்!

காலீன் கிரேடி (colleen grady) இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். சுற்றுலாவாசி, யோகா ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர்.

இந்தியாவிற்கு சுற்றுலாப் பயணியாக வந்துள்ளார். ஜெய்பூர் நகரின் கடைவீதியில் செல்லும்போது, எதிர்பாராத விதமாக தன்னுடைய ஆப்பிள் ஐபோனை தொலைத்துவிட்டார்.

iPhone x ஐந்து மாதங்களுக்கு முன்பே இந்த போனை வாங்கியுள்ளார். நீண்ட நேரம் தேடியும் கிடைக்கவில்லை.

ஐபோன் எக்ஸ் சிறப்பம்சம்

ஐபோன் எக்ஸ் மொபைலைத் திருடினால், திருடியவர் அதைப் பயன்படுத்த முடியாது. யாராலும் ஹாக் செய்ய முடியாத அளவிற்கு புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் அவருடைய போனை யாரும் திருடவில்லை. எதேச்சையாக தொலைத்துவிட்டார். அதன்பிறகு அவர் நடந்துகொண்ட விதம், ஒட்டுமொத்த இந்தியர்களையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் பதிவு

காலீன் கிரேடி ஐபோனை தொலைத்தபின் இன்ஸ்டாகிராமில், “நான் என்னுடைய போனை மிகவும் ஏழ்மையான, மக்கள்தொகை அதிகமான மற்றும் சுற்றுலா பயணிகளை மதிக்காத இந்தியாவில் தொலைத்துவிட்டேன்.

மேலும், என்னுடைய போனை எடுத்து என்ன செய்வதென்றுகூட அவர்களுக்குத் தெரியாது. தங்களுடைய வாழ்நாளில் சம்பாதிக்கும் மொத்தப் பணத்தையும்விட என்னுடைய ஐபோன் அதிக மதிப்பு கொண்டது” எனப் பதிவிட்டுள்ளார்.

ஐபோனை திருப்பிக்கொடுத்த இந்தியர்

காலீன் கிரேடி தன்னுடைய அறைக்குத் திரும்பிவந்து, போனின் லொகேஷனை ட்ராக் செய்துள்ளார். அப்போது போன் ப்ளைட் மோடில் இருந்ததாக கூறியுள்ளார்.

அதன்பின்பே யாரோ திருவிட்டனர் எனப் பதிவு செய்துள்ளார். ஆனால், ஹவுஸ் ஓனர் ஹிந்தியில் அந்த ஐபோனுக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.

உடனே, அந்த போனை வைத்திருந்த இந்தியர் தான் இருக்கும் இடத்தைத் தெரிவித்துள்ளார். காலீன் கிரேடி உடனே அந்த இடத்திற்கு சென்று ஐபோனை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

இந்தியர்கள் கோபம்

இவரே ஐபோனைத் தொலைத்துவிட்டு, ஒட்டுமொத்த இந்தியர்களையும் வசைபாடியதைப் பார்த்த இந்தியர்கள், கண்டபடித் திட்டத்துவங்கிவிட்டனர்.

இந்தச் செய்தி பத்திரிக்கைகள் வரை சென்றதால் உடனே இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை டெலீட் செய்துவிட்டார்.

இன்ஸ்டாகிராம் போட்டோஸ்

நாய் குட்டி மீது அன்பு, யோக பற்று, பக்தி மயம், இயற்கை ரசனை… என விதம் விதமாக போட்டோ பதிவிட்டு நல்ல குணம் படைத்தவர் எனக் காட்டியுள்ளார்.

ஒரு ஐபோன் தொலைந்ததும் அவரின் உண்மை முகம் என்ன எனத் தெரிந்துவிட்டது. நாட்டில் பெரும்பாலானோர் இப்படித்தான் சமூக சேவர்கள் போர்வையில் சுற்றித்திரிகின்றனர்.

Previous articleவிஜய்மல்லையா நாடுகடத்தல்: நாளை மறுதினமா?
Next articleலிப்ட் அருகில் இருக்கும் கண்ணாடி இதற்குத்தானா?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here