புதுச்சேரியில் இன்றுமுதல் மது விற்பனை தூங்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விலை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் புதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி: மத்திய அரசு ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்ததை அடுத்து மதுக்கடைகள் திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து புதுச்சேரியிலும் மது விற்பனை துவங்கியுள்ளது.
25 முதல் 200 சதவிகிதம் காலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் மதுபானங்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. முன்னதாக மே 20-ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது.
அதற்கான கோப்புகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் புதுச்சேரி முதல்வர் அனுப்பிவைத்தார். ஆனால் கலால்வரி விதிக்கப்படாததால் கிரண்பேடி அதனை நிராகரித்தார்.
இதனை அடுத்து நீண்ட விவாதங்களுக்கு பிறகு 20 முதல் 200 சதவிகித அளவிற்கு உயர்த்தப்பட்ட பின்னர் ஒப்புதல் அளிக்கப்பட்டு இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
மாஹே, ஏனாம் தவிர்த்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சாராயத்திற்கு 20% காலால் வரியும், மதுபானங்களுக்கு 20%-200% வரை சிறப்பு காலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் மதுபானங்கள் விலை புதுச்சேரியில் கடுமையாக உயர்ந்துள்ளது.
மதுபானங்கள் விலைப்பட்டியல் :
1. ஆண்டிகுய்ட்டி ப்ளூ பிரீமியம் விஸ்கி 895 லிருந்து 1,240
2. பகார்ட்டி சிட்ரஸ் சிரப் 775 லிருந்து 920
3. புட்வைஷர் பீர் 113 லிருந்து 240
4. சேர்மன் பைன் பிராண்டி 240 லிருந்து 641
5. கிங்பிஷர் பீர் 119 ரூபாயாகவும்
6. ஹண்டர் பிரீமியம் பீர் 130 ஆகவும்
7. MC வி.எஸ்.ஓ.பி பிராண்டி 853 ஆகவும்
8. MC ஓல்ட் காஸ்க் ட்ரிப்பிள் எக்ஸ் ராம் 784 ஆகவும்
9. லா மார்ட்டின் பிரீமியம் பிராண்டி 530 லிருந்து 954
10. ஓல்ட் அட்மிரல் பிராண்டி 250 லிருந்து 560
11. கூரியர் நெப்போலியன் பிரெஞ்சு பிராண்டி 720 ஆகவும்
12. இம்பீரியல் நெப்போலியன் பிரெஞ்சு பிராண்டி 300 லிருந்து
856
13. கிரிம்ப்ஸன் பிராண்டி 400 லிருந்து 852
ஆக உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மதுபான விலை குறைவு என்ற நிலை மாறி தற்போது தமிழகத்தை விட அதிக விலையில் விற்கப்படுகின்றன.