அபிநந்தன் இவ்வளவு கொடுமைகளைச் சந்தித்தாரா! செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்காததின் பின்னணி
இந்தியா-பாகிஸ்தான் போர்க்கைதிகள் என்றால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமே ஒரு நாடு, இன்னொரு நாட்டிடம் ஒப்படைக்க முடியும்.
ஆனால், விங் கமாண்டர் அபிநந்தனை லாகூருக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வாகா எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு நேரடியாக இந்திய எல்லைப் பாதுகாப்பு படையிடம் (BSF) ஒப்படைக்கப்பட்டார். இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை உள்ளது.
இதனால் அபிநந்தன் போர்க்கைதியாக அறிவிக்கப்படவில்லை. இதனால் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கமால், நேராக பாதுகாப்புப் படையிடமே ஒப்படைத்துவிட்டனர்.
அதே நேரம் நான்கு மணிநேரம் தாமதாமாக ஒப்படைக்கப்பட்டார். வாகா எல்லை வரும் வரை அவருக்கு விடுதலையாகப்போகிறோம் எனத் தெரியாது.
அந்த நான்கு மணிநேரம் பாகிஸ்தானையும் பற்றியும், பாகிஸ்தான் ராணுவத்தைப் பற்றியும் மிகவும் பெருமையாகப் பேசக்கூறியுள்ளனர்.
இதற்கு மறுத்த அபிநந்தனை பலமுறை கட்டாயப்படுத்தி பேசவைத்துள்ளனர். நேற்று இரவு அவர் பேசிய வீடியோ பாகிஸ்தான் ஊடங்களில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இந்திய ஊடகங்களே பாகிஸ்தானைப் பற்றி தவறாக சித்தரிகின்றன எனவும் அந்த வீடியோவில் உள்ளது.