பின்லேடன் மகனைப்பற்றி தகவல் கூறினால் 1 மில்லியன் டாலர்கள்: அமெரிக்கா
அல்கொய்தா இயக்கத்தின் முன்னாள் தலைவர் பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடனைப் பற்றித் துப்புக் கொடுத்தால் 1 மில்லியன் டாலர்கள் பரிசளிப்பதாக அமெரிக்க அரசு கூறியுள்ளது.
ஹம்சா பின்லேடன் தற்போது எங்கு இருக்கிறார் என்று சரியாக யாருக்கும் தெரியவில்லை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருக்கலாம் என்று கணிக்கின்றனர்.
ஒசாமாபின்லேடன் இறந்த பிறகு ஹம்சா தன்னுடைய தாயுடன் சில காலம் கழித்து விட்டு தற்போது அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக வளர்ந்து வருவதாக அமெரிக்கா நம்புகிறது.
தன் தந்தையை கொன்றவர்களைப் பழி வாங்கும் எண்ணத்தோடு தீவிரவாத அமைப்பை மேலும் வலுப்படுத்த முயல்கிறார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பான 2015-ல் இவர் ஒரு ஆடியோவை வெளியிட்டு அதில் அனைத்து தீவிரவாதிகளும் சிரியாவில் ஒன்று கூடுவோம் என்று கூறியுள்ளார்.
ஹம்சா பின்லேடன் முகமது அட்டாவின் மகளை திருமணம் செய்து கொண்டார் என்றும், முகமது அட்டா செப்டம்பர் 11, 2001 தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
WANTED. Up to $1 million for information on Hamza bin Laden, an emerging al-Qa'ida leader. Hamza is son of Usama bin Laden and has threatened attacks against the United States and allies. Relocation possible. Submit a tip, get paid. https://t.co/LtBVhsrwTc #RFJ pic.twitter.com/gmx5hkoSzQ
— Rewards for Justice عربي (@Rewards4Justice) February 28, 2019
2011-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறப்பு ராணுவப்படை பாகிஸ்தானின் அப்போட்டபாத் என்ற இடத்தில் பின்லேடனை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.
2001-ஆம் ஆண்டு அமெரிக்காவில் அல்கொய்தா இயக்கத்தினர் நடத்திய தாக்குதலால் ஏறக்குறைய 3000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கவையாகும்.