5ஜி ஏலம்: 5ஜி-யை வேட்டையாட ஜியோ திட்டம்!
இந்தியாவில் 5G சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுவிட்டது. அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா மற்றும் சீனாவில் இந்த ஆண்டு 5G சேவைகள் துவங்கப்பட உள்ளது.
இந்தியாவில் வரும் ஜூலை மாதம் 5G அலைக்கற்றைகள் ஏலம்விடப்பட உள்ளது. 5G சேவையை முதலில் துவங்கும் முனைப்பில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் உள்ளது.
அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ளதால், அடுத்து ஆட்சிக்கு வரப்போவது யார் என இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
பாஜகவே மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எஞ்சியிருக்கும் மொத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இழுத்து மூட வாய்ப்பு உள்ளது.
ஜியோ மட்டும் சிங்கிள் நிறுவனமாக உருவெடுத்தால், பின்பு அவர்கள் வைப்பது தான் விலை என்றாகிவிடும்.
4G-யில் பலத்த நஷ்டத்தைச் சந்தித்து வரும் ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் 5ஜி வருகைக்குப் பின்பாவது தப்பிக்குமா எனப் பார்க்கலாம்.
இப்பொழுது செல்போன் தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது ஜியோ.
5ஜி போன்களை தயாரிப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. மலிவு விலையில் 5ஜி போன்களை தயாரிக்க ஜியோ முடிவு செய்துள்ளது.