Home நிகழ்வுகள் இந்தியா மோடி வரை கொரோனாவை பரப்ப நினைத்த கனிகா குணமடைந்தார்

மோடி வரை கொரோனாவை பரப்ப நினைத்த கனிகா குணமடைந்தார்

2
1813

பாலிவுட் பாடகி கனிகா கபூர் கொரோனா வைரஸ் பாதித்துள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரிடமிருந்து பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே-க்கு பரவியுள்ளது. நரேந்திர மோடி தப்பினார்.

லண்டன் பயணம்

கடந்த வாரம் கனிகா கபூர் லண்டன் சென்று உள்ளார். அங்கு இருந்து மார்ச் 9-ம் தேதி விமானம் மூலம் மும்பை வந்தவர் கொரோனா பரிசோதனை செய்யாமல் எஸ்கேப் ஆகியுள்ளார்.

மக்கள் கூட்டம் கூடும் என விமானத்தில் இருந்து இறங்கியவுடன் பாத்ரூமிற்கு சென்று உள்ளார். அங்கு இருந்த ஊழியர் ஒருவருக்கு பணம் கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளாமல் பிரபலம் என்ற வாய்ப்பை பயன்படுத்தி தப்பி உள்ளார்.

லக்னோ பார்ட்டி

மும்பையில் இருந்து விமானம் மூலம் லக்னோ சென்றுள்ளார். இந்த முறை உள்ளூர் பயணம் என்பதால் கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை.

மார்ச் 13, 14, 15 ஆகிய தேதிகளில் லக்னோவில் பல்வேறு பார்டிகளில் கலந்துகொண்டு உள்ளார். அதில் ஒன்று வசுந்தரா ராஜே கொடுத்த விருந்து நிகழ்ச்சியும் அடங்கும்.

இந்த நிகழ்ச்சியில் வசுந்தராவின் கன்னத்தை உரசியபடி புகைப்படம் கூட எடுத்துள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்து அடுத்த நாள் மார்ச் 16-ல் கனிகாவிற்கு கொரோனா வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது.

மருத்துவப் பரிசோதனை

மருத்துவப்பரிசோதனை செய்து கொண்டதில் இரண்டு நாட்களுக்கு முன் ரிசல்ட் வெளியாகியது. அதில் கனிகாவிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனிகா கலந்துகொண்ட பார்ட்டியில் வந்திருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது.

இதில் வசுந்தரா தேவிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரிடம் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன், பாஜக எம்பி அனுபிரியா பட்டேல் ஆகியோருக்கு பரவி உள்ளது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

இதனையடுத்து குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தும் இவர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. அவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது.

இவ்வளவு பெரிய விபரீதத்திற்கு பிறகே நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் தோன்றி கொரோனா பற்றி உரையாற்றி உள்ளார்.

அதன் பிறகே நாளை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது. மோடி நூழிழையில் கொரோனாவிடம் இருந்து தப்பி உள்ளார்.

நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை கொரோனாவால் ஒத்தி வைத்து இருந்தார். ஹோலி பண்டிகை கூட கலந்துகொள்ளவில்லை.

சென்ற வாரம் முதல் பாஜக நிர்வாகிகள் மற்றும் முக்கியத் தலைவர்களை கூட சந்திப்பதை தவிர்த்து உள்ளார்.

மோடி அவ்வாறு செய்யவில்லை எனில் அவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது என டெல்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவி லண்டன் சென்று திரும்பியதில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் ட்ரூடோவும் தன்னைதானே தனிமை படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா என்பது எப்படி வேண்டுமாலும், யாருக்கு வேண்டுமானாலும் பரவ வாய்ப்பு உண்டு. அறிகுறி இல்லை என்பதற்காக முட்டாள் தனமாக நிகழ்ச்சிகளில் வலம் வந்தால் இப்படித்தான் நடக்கும்.

கனிகா மீது வழக்குப்பதிவு

முறையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளாமல் இருந்தது, நோயை பரப்பியது, அச்சுறுத்தல் ஏற்படுத்தியது தொடர்பாக கனிகா கபூர் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 269, 270, 188 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கனிகா கபூர் குணமடைந்தார்

இத்தனை பேருக்கு கொரோனாவை பரப்ப நினைத்த கனிகா கபூர் குணமடைந்து உள்ளார். ஐந்து முறை கொரோனா உறுதி செய்யப்பட்டும் எப்படி குணமடைந்தார் என்ற கேள்வி எழுந்து உள்ளது.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here