Home நிகழ்வுகள் தமிழகம் பரிமுதல் செய்த மது பாட்டில்களை அப்புறபடுத்த உத்தரவு, உயர்நீதிமன்றம்

பரிமுதல் செய்த மது பாட்டில்களை அப்புறபடுத்த உத்தரவு, உயர்நீதிமன்றம்

பரிமுதல் செய்த மது பாட்டில்களை அப்புறபடுத்த

மதுரை: சென்னை உயர்நீதிமன்றம் பரிமுதல் செய்த மது பாட்டில்களை அப்புறபடுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மற்ற அனைத்து குற்றவியல் நீதி மன்றங்களுக்கும் உத்தரவு பிறப்பித்தது.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அப்புறபடுத்துங்கள்

தற்போது ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் நீதிமன்றங்களின் பிராபர்டி ரூம்(property room) எனப்படும் இடத்தில் வைக்கப்பட்டு உள்ளன.

அரசு தரப்பு வழக்கறிஞர் ஏ. நடராஜன் ஏப்ரல் 28ல் பரிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை விரைவாக அப்புறபடுத்த மதுரை அமர்வுக்கு தாக்கல் செய்த மனுவை ஏற்று பி.என்.பிரகாஷ் மற்றும் டி.கிருஷ்ணவல்லி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவினை பிறப்பித்தது.

திருடப்படும் மது பாட்டில்கள்

கொரோனா பரவலை அடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மதுக்கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து. பரிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் சட்ட விரோதிகளாலும், மதுவிற்கு அடிமையான சிலராலும் நீதிமன்ற வளாகத்திலிருந்து திருடப்படுவதால் இந்த மனுவை தான் சமர்பிப்பதாக தெரிவித்தார்.

இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதிகள் அனைத்து குற்றவியல் நீதிமன்றங்களுக்கும் பரிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை விசாரனை அதிகாரிகள் முன்னிலையில் சரக்குகளை சரிபார்த்து புகைப்படங்கள் எடுத்த பின்னர் உடனடியாக அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு இட்டனர்.

Previous articleஉழைப்பால் உயர்ந்த விஜய்யை Vijay The Face Of Kollywood கொண்டாடும் ரசிகர்கள்!
Next articleஇந்தியாவில் கொரோனா ஊரடங்கு நீடிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here