மும்பை: ஞாயிற்றுக்கிழமை மொத்த கொரோனா எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சியது மராட்டியம். 3,007 புதிய கொரோனா பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85,975ஐ எட்டியது.
மராட்டியத்தில் இன்று மட்டும் 91 பேர் கொரோனாவால் இறந்தனர். மொத்த இறப்பு 3060 ஆக உள்ளது.
சீனாவை மிஞ்சியது
மராட்டியம் தற்போது சீனாவின் மொத்த கொரோனா எண்ணிக்கையாக கருதப்படும் 83,036ஐ மிஞ்சி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மராட்டிய மாநிலத்தின் கொரோனா நிலவரம் பின்வருமாறு
->மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 85,975
->கொரோனா குணமடைந்தவர்கள் 39,314
->கொரோனாவால் இறந்தவர்கள் 3,060
->கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்கள் 5,51,647