Home ஆட்டோமொபைல் பிரபல மகிழுந்து(கார்) நிறுவனமான மாருதி கொரோனா காரணமாக 97.54 % உற்பத்தியை நிறுத்த முடிவு

பிரபல மகிழுந்து(கார்) நிறுவனமான மாருதி கொரோனா காரணமாக 97.54 % உற்பத்தியை நிறுத்த முடிவு

maruthi_su

புதுடெல்லி: இந்தியாவின் பிரபல மகிழுந்து(கார்) உர்பத்தியாளரான மாருதி சுசுகி இந்தியா(MSI) கொரோனா காரணமாக 97.54 சதவிகித உற்பத்தியை நிறுத்த இருப்பதாக செவ்வாய் கிழமை அறிவித்தது.

கடந்த வருடம் இதே மாதம் இந்த நிறுவனம் 1,51,188 கார்களை உற்பத்தி செய்ததாக தெரிகிறது.

சிறிய ரக மகிழுந்துகள்

சிறிய ரக மகிழுந்துகளான ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ போன்ற கார்களின் உற்பத்தியையும் 98.32 சதவிகிதம் வரை நிறுத்துவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாகனார், செலேரியோ, இக்னிஸ், ஸ்விப்ட், பலினோ மற்றும் டிசையர் போன்ற மகிழுந்துகளையும் 97.69% வரை குறைத்து 1,950 அளவுக்கு மட்டுமே உற்பத்தி செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

விடாரா பிரெஸ்ஸா, எர்டிகா

விடாரா பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் எஸ்-கிராஸ் போன்ற மகிழுந்துகளின் உற்பத்தியை 96.25 % வரை குறைத்து 928 வாகனங்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இது கடந்த வருடம் இதே மாதத்தில் 24,748 ஆக இருந்தது.

செடான் வகை மகிழுந்தான சியாஜ் வகையில் 163 மட்டுமே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது இது கடந்த வருடம் 3,834 அளவில் இருந்தது.

சரக்கு வாகனம்

இலகு ரக சரக்கு வாகனமான ‘சூப்பர் கேரி’யின் உற்பத்தியும் 62 வாகனங்கள் என்ற அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. இதன் உற்பத்தி கடந்த வருடம் 3,093 ஆக இருந்தது.

Previous articleபிறந்தநாளன்று காலமானார் அன்பழகன்
Next articleஉடல்வெப்பச் சோதனைக் கருவி(தெர்மல் ஸ்கேனர்) கட்டாயம் வழங்கப்படவேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here