மேட்ச் பிக்ஸிங் கொலையை விட மிகப் பெரிய குற்றம்: தோனி
இந்தியாவின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி மேட்ச் பிக்ஸிங்க் மிகப் பெரிய குற்றம் என்று ரோர் ஆஃப் தி லயன் டிரைலரில் கூறியுள்ளார்.
2013-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2016, 2017 இரண்டு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வருட தடையையும் ரசிகர்கள் அணியின் மீது வைத்திருந்த அன்பையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு படம் ரோர் ஆஃப் தி லயன் (Roar of the Lion) ஆகும்.
ரோர் ஆஃப் தி லயன் (Roar of the Lion)
45 நொடிகள் கொண்ட டிரைலரில் ‘அணியின் மீது மேட்ச் பிக்ஸிங்க் குற்றம் சாற்றப்படும் பொழுது என் மீதும் குற்றம் சாற்றப்பட்டது. அப்போது எங்களுக்கு ரொம்ப கஷ்டமான காலம்.
இதில் இருந்து மீண்டு வார நாங்கள் சிரமப்பட்டோம். மீண்டு வந்தது மிகவும் உணர்ச்சிப் பூர்வமான ஒரு நிகழ்வாகும்.
மேட்ச் பிக்ஸிங்க் கொலையை விட மிகப் பெரிய குற்றமாகும்’ என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.
வருகிற மார்ச் 20ஆம் தேதி ரோர் ஆஃப் தி லயன் முழுப் படமும் ஹாட்ஸ்டர் இணையத்தில் வெளியாகும் என்று ஸ்டார் நெட்வொர்க் தெரிவித்துள்ளது.