Home நிகழ்வுகள் உலகம் சீனாவில் 79 வயது தாயை உயிருடன் புதைத்த மகன், 3 நாட்கள் கழித்து ...

சீனாவில் 79 வயது தாயை உயிருடன் புதைத்த மகன், 3 நாட்கள் கழித்து உயிருடன் மீட்டனர்

3 நாட்கள் கழித்து உயிருடன் மீட்டனர்

வடமேற்கு சீனாவில் உள்ள சான்ஷி மாகாணத்தில் சாப்பாடு மற்றும் தண்ணீர் இல்லாமல் மூன்று நாட்களாக சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த 79 வயது முடக்குவாதம் வந்த முதிய பெண்மணியை காவல் துறையினர் 3 நாட்கள் கழித்து உயிருடன் மீட்டனர்.

புகார் கொடுத்த மருமகள் 

புதைக்கப்பட்ட முதியவரின் மருமகள் தனது மாமியாரை காணவில்லை என கொடுத்த புகாரை அடுத்து போலீஸ் இந்த நடவடிக்கையில் இறங்கியதாக தெரிகிறது.
அவர் கொடுத்த புகாரில், கணவர் சனிக்கிழமை தாயுடன் வெளியில் சென்றார் ஆனால் திரும்ப வரும் பொழுது கணவர் மட்டும்தான் திரும்பி உள்ளார் எனவும், காரணம் கேட்டதற்கு சொந்தகாரர் வீட்டில் தனது தாயை விட்டு வந்துள்ளதாக தனது கணவர் தெரிவித்தார் எனவும் அதனால் தான் சந்தேகம் அடைந்ததாகவும் புதைக்கப்பட்ட முதிய பெண்மணியின் மருமகள் தெரிவித்தார்.

இந்த புகாரை ஏற்றுக் கொண்ட ஜிங்க்பியான் காவல் துறை விசாரனையை முடுக்கிவிட்டது, பிறகு 79 வயதுடைய முடக்குவாதம் வந்த தாயை 58 வயதுடைய மகனே உயிருடன் புதைத்தற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

79 வயது முதிய பெண்மணி புதைக்கப்பட்ட மூன்று நாட்களுக்கு பிறகு சுடுகாட்டிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Previous articleசிறந்த கோலிவுட் அம்மா யார்? நிஜத்திலும், சினிமாவிலும் அம்மா என்றால் அன்பு!
Next articleமதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் ஆணை; ஆன்லைனில் விற்க உத்தரவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here