பெட்ரோல் 1 ரூபாய் மட்டுமே! நள்ளிரவு முதல் அமலுக்கு கொண்டுவந்துள்ளார் ப்ரேம் ஆனந்த்.
ராமர்பிள்ளை யார்ன்னு கேட்டா சின்னக் குழந்தை கூட சொல்லும். அந்த அளவிற்கு பலவருடங்களாக தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர்.
சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவேன்னு சொன்ன மாதிரி…. இவர் பெட்ரோல் தருவேன்னு சொல்லியவர்…. சொல்லிக்கொண்டே இருப்பவர்….
ராமர்பிள்ளையின் வளர்ச்சியை முடக்குவது, கார்பரேட் கைக்கூலிகள் என பல தமிழர்கள் ராமர்பிள்ளைக்கு ஆதரவாக வெகுண்டு எழுந்தனர்.
தமிழகத்தில் ஸ்ரீ ராமருக்கு கூட இவ்வளவு ஆதரவு பெருகியது இல்லை. ராமர்பிள்ளையின் 5 ரூபாய் பெட்ரோல் அறிவிப்பு, தமிழகத்தின் ஒட்டுமொத்த மீடியாவையும் மீண்டும் பரபரப்பாக்கியது.
இப்படி ஒரு சூழ்நிலையில், Let’s Make Engineering Simple வலைத்தளம் ராமர்பிள்ளை உண்மை முகம் என மூன்று நாட்களுக்கு முன் ஒரு வீடியோவை வெளியிட்டது.
ராமர்பிள்ளையின் இத்தனை வருட கூவலை, அந்த ஒற்றை வீடியோ தலைகீழாக புரட்டிப்போட்டது. அவருக்கு ஆதரவாக பேசிய அனைவரும், அடுத்த நொடியே பின் வாங்க துவங்கிவிட்டனர்.
யார் இந்த LMES?
இதே கேள்வி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போதே பலரால் கேட்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் படிப்பை துவங்கி, அமெரிக்காவில் வேலையில் சேர்ந்தார் ப்ரேம் ஆனந்த். அவர் மீண்டும் இந்தியா வந்து துவங்கிய நிறுவனம் தான் LMES.
Lets Make Engineering Easy எனத்துவங்கி, Let’s Make Engineering Simple என மாற்றிக்கொண்டார். ஆரம்ப கட்டத்தில் அறிவியல் மற்றும் கணிதத்தை எளிதில் புரியும்படி தெளிவாக வீடியோவுடன் விளக்கம் அளித்தார்.
அதுவரை இவர், ஒரு கல்வி கற்பிப்பவராக தான் அனைவருக்கும் அறிமுகமானார். ஸ்டெர்லைட் வீடியோ இவரை வெகுவேகமாக பலரிடம் கொண்டு சேர்த்தது.
அந்த வீடியோவிற்கு பிறகு, கவனிக்கத்தக்க மனிதராக உருவெடுத்தார். அதே போன்று சர்ச்சை மனிதர் எனவும் பெயர் பெற்றார்.
அறிவியலையும், கணிதத்தையும் தமிழில் இவ்வளவு அழகா புரியவைப்பது, இவருக்கு நிகர் இவரே.
அதேவேளை அவ்வப்போது பரபரப்பு வீடியோக்களையும் வெளியிட ஆரம்பித்தார். அந்த பரப்பு வீடியோவும், அறிவியலைச் சார்ந்தே இருக்கும் என்பது கூடுதல் தகவல்.
ராமர் பிள்ளை கண்டுபிடிப்பு
ராமர்பிள்ளையின் கண்டுபிடிப்பு மீது பிரேம் ஆனந்த் கவனம் திரும்பியது. ராமர்பிள்ளை என்ன கண்டுபிடித்தார் என ஆராயும் வேலையில் இறங்கியது இவருடைய குழு.
பல மாதங்களாக ராமர் பிள்ளையை வளைத்து வளைத்து வீடியோ எடுத்தும், ராமர் பிள்ளையின் மூலிகை எரிபொருள் தயாரிப்பு முறையை, இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
கல்வி, குழந்தைகள், கற்பிப்பு என ராமர் பிள்ளையை ஸ்டுடியோவிற்கு வரவழைக்க வலைவிரித்தனர். ராமர்பிள்ளையும் வான்டெட்டாக வந்து வலையில் சிக்கினார்.
அவருடைய மெழுகு ரகசியத்தை தெரிந்துகொண்ட பிரேம்ஆனந்த், அவருடைய தயாரிப்பு முறையை கேட்டு வற்புறுத்தியுள்ளார். அப்பொழுதும், தயாரிப்பு முறை பற்றி தெரிவிக்க மறுத்துவிட்டார் ராமர்பிள்ளை. (இது ராமர் பிள்ளையின் குற்றச்சாட்டு)
இந்த வீடியோ வெளியீட்டுக்குபின் ஆதான் மீடியா என்கின்ற யூடியூப் சேனலில் ராமர்பிள்ளையின் பேட்டி ஒளிபரப்பாகிறது.
அந்த வீடியோவில் மூச்சுக்கு முன்னூறு முறை தமிழ் மக்கள், சீமான் அய்யா எனக்குறிப்பிடுகின்றார்.
சீமானை அய்யா என அழைத்த முதல் தமிழர் இவர் தான். அவருடைய தொண்டர்கள் கூட அண்ணன் என்று தான் அழைப்பார்கள்.
ஆனால், சீமானை விட வயதில் முதியவர் ராமர் பிள்ளை. அவரை அய்யா எனக் குறிப்பிட்டது சற்று சிந்திக்க வேண்டிய விசயமே.
ராமர்பிள்ளையின் பதில் வீடியோவிற்கு பிறகு, ப்ரேம் ஆனந்த் ஒரு பதில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அவற்றை எல்லாம் எழுத்தில் சொன்னால் புரியாது. மூன்று வீடியோக்களையும் நிச்சயம் பாருங்கள். பார்த்தல் தான் அதைப்பற்றி முழுமையாக புரியும்.
இவ்வளவு நடந்தும் பிரேம் ஆனந்த், ராமர்பிள்ளையை இறுதி வரை ஏமாற்றுக்காரர் எனக்கூறவில்லை.
ஆனால், அவர் கண்டுபிடித்த விஷயத்தை மறைப்பதற்கு, போலியான மற்றும் தவறான சோதனை முறைகளை சொல்லி ஏமாற்றி வருகின்றார் என்று தான் கூறியுள்ளார்.
ராமர் பிள்ளையின் சிதம்பர ரகசியம்
தமிழர்கள் அவரிடம் வைத்த கோரிக்கை, பெட்ரோல் தயாரிக்கும் முறையை வெளிப்படையாக சொல்லிவிடுங்கள் என்று தான்.
கடவுளே வந்து கேட்டாலும், புறநானுறை எழுதியவர் வந்து கேட்டாலும், ராமர்பிள்ளை சொல்லுவதாக இல்லை.
அவர் வெளியில் சொல்லி, அது நடைமுறைக்கு வந்துவிட்டால் அதைக்கண்டுபிடித்தவர் ராமர்பிள்ளை தான். அதை எவராலும் மாற்ற முடியாது.
இப்பொழுது உள்ள மீடியா உலகில், நிச்சயம் வேறு ஒருவர் இனிஷியல் போட்டுக்கொள்ள வாய்ப்பே இல்லை.
ஆனால் அதையும் மீறி மூலிகை பெட்ரோலை வைத்துக்கொண்டு, பணம் பார்க்க நினைக்கின்றாரோ என எண்ணத் தோன்றுகின்றது. மேலும், மூலிகை பெட்ரோலை கண்டுபிடிக்கவில்லையோ? எனவும் எண்ணத் தோன்றுகின்றது.
ராமர்பிள்ளையின் மூலிகை பெட்ரோலுக்கு போட்டியாக, ஒரு ரூபாய் பெட்ரோலை அறிமுகம் செய்துள்ளார் பிரேம் ஆனந்த்.
இதன் பிறகு கண்டுபிடிப்பு என எவன் ஒருவன் கூறினாலும் நம்பிக்கை வருமா?
இதற்கெல்லாம் ராமர் பிள்ளை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய எண்ணமும்.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? பெட்ரோல் இல்லை! அதனால் கையேந்துகிறோம் வெளிநாட்டில்!
அ இல்லை தந்த புறநானுறு. ராமர்பிள்ளைக்கு அதரவாக எழுதிய அதே கைகள் தான் இந்தக் கட்டுரையும் எழுதுகின்றது.
அ இலை உண்மையாகி விடாதா என்ற கனவோடு!!!
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். உங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யுங்கள்.