கேஜிஎப் 2: சோன்பத்ரா தங்கச்சுரங்கம் மர்மமான கதை. கோலார் தங்க வயல் (KGF – Kolar Gold Fields) போன்று உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு உண்மையா?
கேஜிஎப் 2: KGF – Kolar Gold Fields
கர்நாடகத்தில் கோலார் என்ற இடத்தில் தங்கச்சுரங்கம் இருப்பது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் அந்த தகவலை வெளியில் கசிய விடாமல் அங்கு இருந்த தாதாக்கள் ரகசியமாக பாதுகாத்து பெரும் செல்வந்தர்களாக உருவெடுத்தனர்.
இதைப்பற்றிய படமும் கேஜிஎப் என்ற பெயரிலேயே வெளியானது. கேஜிஎப்-இல் சோழர்கள் காலம் தொட்டே தங்கம் எடுக்கப்பட்டு வந்ததாகவும் கல்வெட்டுகள் உள்ளன.
கோலார் தங்கச் சுரங்கம் பல அரசியல் தலைவர்கள், பல மும்பை தாதாக்கள் மத்தியில் நிழல் உலகமாகச் செயல்பட்டு வந்துள்ளது.
Sonbhadra Gold Hills
நேற்றைய முன்தினம் அனைத்துப் பத்திரிக்கை, சோஷியல் மீடியாக்களில் இதுதான் ஹாட் டாபிக். உலக அளவில் இந்த செய்தி ட்ரெண்டிங். 3000 டன் தங்கம் என்றால் சும்மாவா?
உத்திரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ஹார்தி , சோனா பகதி ஆகிய இடங்களில் தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு எனச் செய்திகள் வெளியாகின.
இந்த செய்தியை வெளியிட்டவர் சோன்பத்ரா மாவட்ட சுரங்கத்துறை அதிகாரி கே.கே.ராய். ஊடகங்கள் முன்பு தோன்றி இதைத் தெரிவித்தார்.
அங்கு 3300 டன் தங்கம் இருக்க வாய்ப்புள்ளதாகவும், கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த தங்கச் சுரங்கங்கள் ஆன்லைன் மூலம் டெண்டர் விடப்படும் எனவும் தெரிவித்தார்.
ஆனால் அடுத்து நாளே இந்த தகவலை இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் டைரக்டர் எம்.ஸ்ரீதர் மறுத்துள்ளார். இந்த தகவல் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய புவியல் ஆய்வு மையம் எந்த ஒரு அறிக்கையும் சோன்பத்ரா சுங்கத்துறை அதிகாரிகளிடம் சமர்பிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 1998 முதல் 2000 ஆண்டுகள் வரை தங்கப் படிமங்கள் தேடும் பணி நடைபெற்றது. ஆனால் அங்கு அதிக அளவில் தங்கம் இருப்பதாக முடிவுகள் கிடைக்கவில்லை.
அப்படி அங்கு அதிக அளவில் தங்கம் இருந்தால் நிச்சயம் அதை உத்திரப்பிரதேச அரசிடம் ஒப்படைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒரு கேஜிஎப்? தங்கச்சுரங்கம் மர்மமான கதை
முதலில் ஒரு அதிகாரி மீடியா முன்பு தோன்றி தங்கம் இருக்கிறது. அதுவும் 3300 டன் தங்கம் என புள்ளி விவரங்களுடன் கூறி ஏலமும் விடப்படும் எனத் அறிவித்தார்.
தங்கம் இருக்கிறது என்றால் இருக்கிறது என்று கூறி இருக்கலாம். ஏலம் விடப்படும் என தெரிவித்து இருந்தார்.
ஏலம் விடப்படும் என்றால் உத்திரப்பிரதேச மாநில அரசு முடிவு செய்த விசயமாக இருக்கும். அந்த அரசின் அனுமதி இல்லாமல் கே.கே.ராய் இப்படி ஒரு தகவலை மீடியா முன்பு தோன்றி கூறியிருக்கமாட்டார்.
அடுத்தநாளே இந்திய புவியியல் ஆய்வு மையம் இதை மறுத்துள்ளது. ஆனால் ஏன் சுங்கத்துறை அதிகாரி இப்படி கூறினார் என முழுமையான தகவல் அளிக்கப்படவில்லை.
இதற்கு இடையில் என்ன நடந்தது? தங்கச்சுரங்கம் உண்மையில் இல்லையா? அல்லது தங்கச்சுரங்கம் இருப்பது மறைக்கப்படுகிறதா?
3000 டன் தங்கம் குட்டி மலையில் இருந்தாலும், அதைப்பார்த்து மெகா உயரத்தில் இருக்கும் இமயமலையே பொறமை கொள்ளும் உலகம் இது.
இதில் மனிதர்கள் என்ன விதிவிலக்கா? நெருப்பு இல்லாமல் புகையாது என்பதைப்போல உபியில் தங்கச்சுரங்கம் மர்ம முடிச்சாக மாறியுள்ளது. அதை அவிழ்க்க மீண்டும் ஒரு ராக்கி வருவா?