மெக்கா பயணிகள் விசா தற்காலிகமாக ரத்து செய்வதாக சவுதி அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மெக்கா உலக செய்திகள்.
இஸ்லாமியர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சவுதியின் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் ஏராளமான இந்திய முஸ்லீம்கள் மெக்காவிற்கு வருடம் தோறும் புயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரானா வைரஸ் பீதியால் மெக்காவிற்கு வருகை தரும் பல்வேறு நாட்டு பயணிகளின் விசாவை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக அனைத்து நாடுகளிடமும் வலியுறித்தி உள்ளது.
இதனால் மத்திய அரசு அனைத்து விமான நிலையங்களிலும் சவுதி மெக்கா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என கூறி உத்தரவிட்டு உள்ளது.
சென்னை விமான நிலையத்தில், சவுதி அரேபியா செல்லவிருந்த 170 பயணிகளை, பயணம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறி வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.