Home நிகழ்வுகள் தமிழகம் சென்னையில் மட்டும் 2 கோடியை தாண்டியது கொரோனா அபராதம்

சென்னையில் மட்டும் 2 கோடியை தாண்டியது கொரோனா அபராதம்

சென்னையில் மட்டும் 2 கோடியை

சென்னை: கொரோனா முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை சென்னையில் மட்டும் 2 கோடியை தாண்டியது.

மாநகராட்சி ஆணையரை முதன்மை அதிகாரி

நகரத்தில் கொரோனா கட்டுபடுத்தலை தடுக்க மாநகராட்சி ஆணையரை முதன்மை அதிகாரியாக அரசு நியமித்துள்ளது.

வழக்குகள் பாரபட்சமின்றி பதியப்பட்டன

முதல்கட்ட கொரோனா ஊரடங்கு ஏப்ரல் 14இல் முடிவுக்கு வந்த பின் முக கவசம் அணியாமல் வந்தவர்களின் மீது வழக்குகள் பாரபட்சமின்றி பதியப்பட்டன.

காவல் துறை தரப்பில், நாங்கள் 40,100 வழக்குகளை ஏப்ரல் கடைசி வாரம் முதல் ஜூன் 5ஆம் தேதி வரை பதிந்தோம் எனவும் சட்டத்தை மீறியவர்களின் மீது குறைந்தது ₹.500 அபராதமாவது வசூலிக்கப்பட்டது எனவும் தெரிவித்தனர்.

5.89 இலட்சம் பேர் கைது

இதுவரை மாநில அளவில் 5.48 இலட்சம் வழக்குகள் இந்த கொரோனா காலத்தில் பதியப்பட்டுள்ளன, 5.89 இலட்சம் பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் 4.50 இலட்சம் வாகனங்கள் பரிமுதல் செய்யப்பட்டன என தெரிவித்தனர்.

மாநில அளவில் அபராதத்தொகை ₹. 10.44 கோடி 

சனிக்கிழமை காலை 9.00 மணிவரை ₹. 10.44 கோடி அபராதத்தொகை மாநில அளவில் வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.

Previous articleசென்னை பாம்பு பூங்காவில் கரியல் முதலை 24 குட்டிகளை ஈன்றது
Next articleதனுஷின் அசுரன் சீன மொழியில் ரீமேக்கா? தயாரிப்பாளர் தாணு விளக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here