சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்த இ. வேல்முருகன் கொரோனா பாதித்து இருந்த நிலையில் சனிக்கிழமை இராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராஜ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்தவர்
வேல்முருகனுக்கு வயது 40 மற்றும் அவர் ராஜ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்துள்ளார்.
பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல்
“15 நாட்கள் சிகிச்சையில் இருந்த வேல்முருகனின் இறப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கொரோனா பாதித்த மக்களுக்கு உதவுபவர்கள், ஊடகவியலாளர்கள், புகைப்பட ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்,” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஒளிப்பதிவாளர் வேல்முருகனின் இறப்பிற்கு இறங்கல் தெரிவித்து பேசிய பா.ம.க நிறுவனர் எஸ். இராமதாஸ் மற்றும் அ.ம.மு.க பொது செயலாளர் டி.டி.வி தினகரன் ஆகியோர் ஊடக துரையில் பணிபுரியும் அனைவரும் கூடுதல் கவனமாக இருக்கும்படி தெரிவித்தனர்.