தமிழகத்தில் வானிலை மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் மழைப்பொழிவும் காணப்பட்டு வருகிறது என வெதர்மேன் தெரிவித்து உள்ளார்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
கனமழை பொழியும். இதை சாக்காக கொண்டு புதிய வதந்தி ஒன்றை உருவாக்கி உள்ளனர். வாட்ஸ்ஆப் இன்று அது தான் ட்ரெண்டிங். அதை வதந்தி எனத் தெரியாமல் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பொழியும். இதனால் கொர்ரோன்னா வேகமாகப் பரவும் எனவே, பொதுமக்கள் உஷாராக இருந்துகொள்ளுங்கள்.
தூங்கும் போது கூட மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். ஜன்னலை கூட திறந்து வெளியில் வர வேண்டாம் என who வலியுறித்தி உள்ளது என ஒரு வதந்தி பரவி வருகிறது.
இதை யாரும் நம்பி அதிகமாக சேர் செய்து அடுத்தவரை பயமுறுத்த வேண்டாம். இது போலியான நபர்கள் ஆதாரமில்லாமல் வெளியிட்டு மக்களை குழப்பி வருகின்றனர்.