சென்னையில் 316 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 580 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை: நேற்று வியாழன் அன்று தமிழகத்தில் 580 புதிய கொரோனா நோய் தொற்றுகள் பதிவாகியுள்ளன. சென்னையில் மட்டும் 316 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இந்த விவரங்களை சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பிரிவு துறையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 508 புதிய தொற்றுகளுடன் தமிழகத்தில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது.
நோய் தொற்றுக்கு இரண்டு பேர் புதிதாக இறந்துள்ள நிலையில் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது. 56 வயது பெண் புதன்கிழமை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் உயிரிழந்தார்.
48 வயது பெண் ஒருவர் வியாழன் அன்று ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். 31 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
3,822 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். சென்னையை அடுத்து அதிகபட்சமாக திருவள்ளூரில் 63 தொற்றுகள் பதிவாகியுள்ளன. விழுப்புரத்தில் 45, கடலூரில் 32, பெரம்பலூரில் 33 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
அரியலூரில் 24 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில் நேற்று புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள்.
இதுவரை இந்தியாவில் பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 56,342 ஆக அதிகரித்துள்ளது. இறப்புகள் 1,886 ஆக உயர்ந்துள்ளன.