ஊரடங்கால் அரசுக்கு 35,000 கோடி இழப்பு-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகவல். சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இதனை முதல்வர் தெரிவித்துள்ளார்.
சேலம்: கொரோனா நோய் பரவலை அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கால் தமிழக அரசுக்கு 35,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சேலத்தில் நேற்று முன்தினம் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முழுமையாக மேற்கொண்டு வருகிறது. மார்ச் மதம் 23-ம் தேதி முதல் நடாய்முறையில் இருந்துவருகிறது.
பொது முடக்கத்தால் தமிழகத்திற்கு இதுவரை 35,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நலத்திட்டங்கள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் எந்த தடையும் இன்றி தொடர்ந்து நடைபெறும்.
மே மதம் 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. சில தளர்வுகளும் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கு பின்னர் வெளியிடப்படும் மத்திய அரசின் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழகத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
மேலும் திமுகவின் ஆர்.எஸ் பாரதி கைது நடவடிக்கைக்கும், தமிழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பட்டியல் இனத்தவர்களை விமர்சித்ததை அடுத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் தான் அரசின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
ஆர்.எஸ் பாரதி பட்டியலினத்தவரை இழிவாக பேசியபோதே ஸ்டாலின் அவரை கண்டித்திருக்க வேண்டும். ஆர்.எஸ் பாரதி தரும் புகார்களில் உள்ள உண்மைத்தன்மை என்னவென்று ஊடகங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
அரசின் இ-டெண்டரில் முறைகேடுகள் நடப்பதாக ஆர்.எஸ் பாரதி கூறுவது முற்றிலும் பொய். ஊடக விளம்பரங்களுக்காக பாரதி அவ்வாறு கூறி வருகிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு கெட்ட நிதியில் போதிய நிதியர் மத்திய அரசு வழங்கவில்லை. புறநகர், கிராம பகுதிகளில் தொழிற்ச்சாலைகள் இயங்க துவங்கியுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.