Home Latest News Tamil தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 பேர் கொரோனாவிற்கு பலி

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 பேர் கொரோனாவிற்கு பலி

356
0
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 பேர் கொரோனாவிற்கு பலி

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இதனால் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை: நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 526 புதிய கொரோன னாய் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதனால் இதுவரை தமிழ்நாட்டில் தொற்றுநோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக ஒரே நாளில் நேற்று 4 பேர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பை சுகாதாரத்துறை வெளியிட்ட மருத்துவ சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று உயிரிழந்த நான்குபேரும் பெண்கள் என்றும், இதில் மூன்று பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

பதிவான 526 புதிய தொற்றுகளில், சென்னை 279, விழுப்புரம் 67, செங்கல்பட்டு 40 ஆக புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் 10 மாவட்டங்கள் அதிக எண்ணிக்கையை எட்டியுள்ளன.

சென்னையில் இதுவரை பதிவான கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 3,330 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,824 நோய் தொற்றிலிருந்து பூரண நலம் பெற்றுள்ளனர்.

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் சீனாவில் துவங்கி இன்று உலகெங்கும் பரவி பேரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த நோய் பலரின் உயிரை பலிகொண்டுள்ளது.

மும்பையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை 12,864 ஆக உள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 489 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தானில் 3,708 உயிரிழப்புகளின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 129 புதிய நோய் தொற்றுகள் மற்றும் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிராவில், புதியதாக 1,165 பதிகாகி மொத்த நோய் தொற்றுகள் எண்ணிக்கை 20,228 ஆகவும், 48 பேர் உயிரிழந்ததை அடுத்து இம்மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 779 ஆகவும் உயர்ந்துள்ளது.

பல்வேறு நாடுகளும் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவரும் நிலையில் இன்னும் அதிகாரப்பூர்வமாக மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

குஜராத்தில் 394 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதனால் மொத்த எண்ணிக்கை 7,797 ஆகவும், 23 நோயாளிகள் நேற்று இறந்த நிலையில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 472 ஆகவும் உள்ளது.

அகமதாபாத்தில் மட்டும் 280 புதிய நோய் தொற்றுகள் மற்றும் 20 இறப்புகள் பதிவாகியுள்ளன. டெல்லியில் 224 புதிய தொற்றுகள் பதிவான நிலையில் மொத்த தொற்றுகள் எண்ணிக்கை 6,542 ஆக உயர்ந்துள்ளது.

Previous articleகேரளாவில் புதிதாக இரண்டு கொரோனா தொற்று, மருத்துவமனைகள் தயார்: பினராயி விஜயன்
Next articleசர்வதேச அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here