தமிழ்நாட்டில் மேலும் 509 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. நேற்று ஒரே நாளில் 509 புதிய நோய் தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு: நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 509 புதிய கொரோனா தொற்றுகள் பதிவானதால் இதுவரை தமிழ்நாட்டில் பதிவான மொத்த நோய் தொற்றுகளின் எண்ணிக்கை 9,227 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை, கடந்த சில நாட்களாக கொரோனா நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த சில நாட்களாக 500-க்கு மேல் இருந்த எண்ணிக்கை இன்று 380-ஆகா பதிவாகியுள்ளது.
கொரோனா நோய் தொற்றுக்கு நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் இதுவரை பெருந்தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 42 பேர் நோய் தொடரிலிருந்து முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,176 ஆக உயர்ந்துள்ளது.
இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 502 பேரில் 288 பேர் ஆண்கள் மற்றும் 221 பேர் பெண்கள் ஆவர். சென்னையில் இதுவரை 5,262 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 6,136 பேர் ஆண்கள், 3,088 பேர் பெண்கள் மற்றும் 3 திருநங்கையர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை தமிழ்நாட்டில் பதிவான கொரோனா நோய் தொற்றுகளில் சென்னை 75% எண்ணிகையை பதிவுசெய்துள்ளது. தமிழ்நாட்டில் 6,984 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
இந்தியாவில் நேற்று புதிதாக 2,415 நோய் தொற்றுகள் பதிவானதால் நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,281 ஆக அதிகாரித்துள்ளது. 122 பேர் நேற்று கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2,415 ஆகா அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிராவில் 921 இறப்புகளும், குஜராத்தில் 537 இறப்புகளும் பதிவாகியுள்ளன.