Home Latest News Tamil வெளிநாட்டில் இருந்த திரும்பிய 37 பேர் உட்பட 601 புதிய கொரோனா தொற்று: தமிழகம்

வெளிநாட்டில் இருந்த திரும்பிய 37 பேர் உட்பட 601 புதிய கொரோனா தொற்று: தமிழகம்

வெளிநாட்டில் இருந்த திரும்பிய 37 பேர் உட்பட 601 புதிய கொரோனா

தமிழ்நாடு: செவ்வாய்கிழமை தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்த திரும்பிய 37 பேர் உட்பட 601 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் 84 பேர் இறப்பு

கடந்து மூன்று மணிநேரத்தில் 3 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். ஆகமொத்தம் தமிழகத்தில் 84 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது வரை 7,466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். செவ்வாய் அன்று மட்டும் 489 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 4,895 பேர் குணமடைந்து உள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா

கடந்த 24 மணிநேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றுகளில் 37 தொற்றுகள் துபாய், குவைத் மற்றும் மலேசியா போன்ற வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

மாலத்தீவிலிருந்து தமிழகம் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் இருந்து தமிழகம் திரும்பிய 49 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதுவரை தமிழகத்தில் 332,352 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 63 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன.

Previous articleமொபைல் விளையாட்டு வினை ஆனதா?. பப்ஜி விளையாடிய மாணவர் மரணம்: ஈரோடு
Next article20/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here