தமிழகத்தில் 639 புதிய கொரோனா நோய் தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 639 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,224-ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் இன்று மட்டும் புதிதாக 639 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 13,081 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதனால் கொரோனா பாத்தித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,224-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 480 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
மேலும் சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டமான செங்கல்பட்டில் 28 பேருக்கும், திருவள்ளூரில் 18 பேருக்கும் புதிதாக நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் பதிவான 639 தொற்றுகளில் 81 பேர் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தமிழகம் திரும்பியவர்கள்.
இன்று புதிதாக 4 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 78 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 96,169 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா பெருந்தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 3029 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 33053 பேருக்கு இதுவரை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 1198 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
பொது இடங்களில் கிருமிநாசினி தெளிப்பதால் பலனில்லை. இதனால் கொரோனா கிருமி அழியாது, மாறாக இந்த கிருமி நாசினி மனிதர்களுக்கு பலவித உடல்நலக்குறைபாடுகளை உண்டாக்கும் என்று WHO தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மே 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் திரு.பழனிசாமி அறிவித்தார். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு எந்த தளர்வுகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு மாற்றும் வெளிமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாடு திரும்ப சிறப்பு ரயில், விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகம் திரும்புவோர் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்.