தஞ்சாவூர்: செவ்வாய் கிழமை தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் பெருங்கற்காலத்தை சார்ந்த முதுமக்கள் தாழி ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டது.
ஏரியை உழவர்கள் தூர்வாரிய போது
கட்டயங்காடு என்ற இடத்தில் உள்ள அய்யனார் ஏரியை உழவர்கள் தூர்வாரிக்கொண்டிருந்த போது இந்த முதுமக்கள் தாழி தென்பட்டது.
இதை அடுத்து தமிழ் பல்கலைகழகத்தின் தொல்லியல் துறை மற்றும் பட்டுக்கோட்டை தாசில்தார் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இச்செய்தியை அறிந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் எம். கோவிந்தரசு முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு வந்து நடந்தவை குறித்து கேட்டறிந்தார்.
முதுமக்கள் தாழி 2500 வருடங்கள் பழமைவாய்ந்தது
தமிழ் பல்கலை கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்பொருள் ஆராய்ச்சியின் துறைத்தலைவர் வி. செல்வகுமார் கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழி 2500 வருடங்கள் பழமைவாய்ந்தது என தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் மேலும் பல முதுமக்கள் தாழிகள் அந்த ஏரியில் மூழ்கியிருக்கக்கூடும் என தெரிவித்தார்.
சமீபத்தில் இதுபோன்ற முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன
சமீபத்தில் இதுபோன்ற முதுமக்கள் தாழிகள் பேராவுரணி மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் கிடைத்துள்ளன என அவர் தெரிவித்தார்.
இரண்டாம் கட்ட புதைப்பிற்கு பயண்படுத்திய தாழிகள்
“அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் இத்தகைய தாழிகளை இறந்தவர்களின் இரண்டாம் கட்ட புதைப்பிற்கு பயண்படுத்தினர். எரியூட்டப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட தங்களது முன்னோர்களின் எலும்புகளை அவர்களின் நினைவாக வைக்க இந்த முதுமக்கள் தாழிகளை பயண்படுத்தினர்”, என செல்வகுமார் தெரிவித்தார்.