Home நிகழ்வுகள் தமிழகம் திருடப்பட்ட பைக்: 100 கிமீ விரட்டி சென்று பிடித்தனர்

திருடப்பட்ட பைக்: 100 கிமீ விரட்டி சென்று பிடித்தனர்

327
0
திருடப்பட்ட பைக்

திருடப்பட்ட பைக்: 100 கிமீ விரட்டி சென்று பிடித்தனர்

சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள மேடவாக்கம் சாலையில் வசிப்பவர் புஷ்பராஜ். இவருடைய இருசக்கர வாகனம் காணமல் போய் உள்ளது.

திருடுபோனால் கண்டறிவதற்கு ஏதுவாக இவருடைய பைக்கில் ஜி.பி.எஸ். கருவியை முன்னெச்சரிகையாக பொருத்தியுள்ளார்.

இதனால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே காவலர்கள் ஜிபிஎஸ் கருவியின் உதவியுடன் திருடப்பட்ட பைக்கை பின் தொடந்து சென்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே அந்த பைக்கையும் அதைத் திருடியவர்களையும் மடக்கிப்பிடித்தனர்.

சுமார் நூறு கிலோமீட்டர் தூரம்வரை விரட்டி சென்று திருடர்களைப் போலீசார் பிடித்துள்ளனர். பைக்கை திருடிய மேக சூர்யா, வினோத்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here