சென்னை: வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் வெளியில் சுற்றுவதை பார்த்தால், அரசு அல்லது தனியார் தனிமைப்படுத்துதல் மையங்களில் சேர்கப்படுவர் என சென்னை மாநகர ஆணையர் ஜி.பிரகாஷ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
அவர்கள் மீது வழக்குகள் பதியப்படும்
அவ்வாறு வெளியில் சுற்றும் சில நபர்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் எனவும், “அவர்களின் நடவடிக்கைகளை கண்கானிக்க உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளை நாடியுள்ளதாகவும், அவ்வாறு சுற்றுபவர்கள் கண்கானிக்கப்பட்டுவார்கள் மற்றும் அவர்கள் மீது வழக்குகள் பதியப்படும்.” எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் 85% மக்கள் சட்டத்தை ஒழுங்காக கடைபிடிப்பதாகவும் மீதம் உள்ளவர்கள் கடைபிபிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
முக கவசம் அணிவதன் முக்கியம்
கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஜே.ராதாகிருட்டிணன் ஐ.ஏ.எஸ் சென்னை மாநகராட்சியில் முககவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
திடீர் சோதனை
சென்னையில் உள்ள கண்ணகி நகரில் வசிக்கும் மக்களை பாராட்டி பேசிய பிரகாஷ், “நாங்கள் திடீர் சோதனை செய்ததில் 95% மக்கள் முக கவசம் அணிந்துள்ளதை பார்த்தோம். அந்த இடமானது அதிக மக்கள் நெருக்கடி மிகுந்தது, மற்றும் அவர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் நிலைமை மோசமாகியிருக்கும்”, என தெரிவித்தார்.