Home சினிமா கோலிவுட் ரஜினி படத்தின் கதை உரிமைக்காக தேடி அலையும் இயக்குநர்!

ரஜினி படத்தின் கதை உரிமைக்காக தேடி அலையும் இயக்குநர்!

309
0
Aval Appadithaan Remake Rights

Aval Appadithaan Remake Rights; ரஜினி நடித்த படத்தின் கதை உரிமைக்காக தேடி அலையும் இயக்குநர்! ரஜினிகாந்த் நடித்த அவள் அப்படித்தான் படத்தின் ரீமேக் உரிமைக்காக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் தேடி அலைவதாக கூறப்படுகிறது.

அவள் அப்படித்தான் படத்தின் உரிமை யாரிடம் இருக்கிறது என்பதற்காக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் பல நாட்களாக தேடி அலைவதாக கூறப்படுகிறது.

கடந்த 1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், கமல் ஹாசன், ஸ்ரீப்ரியா ஆகியோரது நடிப்பில் வந்த படம் அவள் அப்படித்தான்.

இயக்குநர் ருத்ரையா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். தற்போது 42 வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் அவள் அப்படித்தான் படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார்.

இதற்கு முன்னதாக இவரது இயக்கத்தில், பாணா காத்தாடி, செம போத ஆகாதே ஆகிய படங்கள் வெளி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அவள் அப்படித்தான் படத்தை மீண்டும் இயக்க முன்வந்தது ஏன் என்பது குறித்து அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அவள் அப்படித்தான் படத்தின் கதை இன்றைய சூழலுக்கு பொருந்தும் கதை. மீ டூ சர்ச்சை, காஸ்ட்யூம் கவுச் ஆகிய பிரச்சனைகளை 42 வருடங்களுக்கு முன்பு பேசிய படம்.

இந்தப் படத்தில் பெண்ணியம் அதிகளவில் பேசப்பட்டிருக்கும். பெண்ணியவாதியாக கமல் ஹாசன் நடித்திருந்தார்.

அவள் அப்படித்தான் ரீமேக்கில் ரஜினி கதாபாத்திரத்தில் சிம்புவும், கமல் ஹாசன் ரோலில் துல்கர் சல்மான் அல்லது விஜய் தேவரகொண்டா, ஸ்ரீப்ரியா கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனும் நடித்தால் இந்தப் படத்திற்கு கச்சிதமாக இருக்கும்.

இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தும் இந்தப் படத்தை இயக்குவதை பெருமையாக கருதுகிறேன். அவள் அப்படித்தான் கதையை படமாக்கும் உரிமை யாரிடம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

அதன் உரிமைக்காக தேடி அலைகிறேன். அவள் அப்படித்தான் படத்தின் உரிமையை பெற்றுவிட்டால், அடுத்தகட்ட வேலைகளை உடனடியாக செய்வேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here