தமிழகத்தில் 8000-ஐ கடந்தது கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை. நேற்று ஒரே நாளில் 798 புதிய நோய் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் வரையில் கட்டுக்குள் இருந்த கொரோனா நோய் தொற்றுகளின் எண்ணிக்கை மே மாத துவக்கத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இன்று ஒரேநாளில் தமிழகத்தில் புதிதாக 798 புதிய நோய் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8002 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 11,584 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக தலைநகர் சென்னை, தொடர்ந்து மாநிலத்திலேயே அதிகப்படியான எண்ணிக்கைகளை பதிவு செய்து வருகிறது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக நேற்று 6 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று மட்டும் 538 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 90 பேருக்கும், திருவள்ளூரில் 97 பேருக்கும், அரியலூரில் 33 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 4,213 புதிய நோய் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதனால் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,152 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை பதிவான 8002 நோய் தொற்றுகளில் 5421 பேர் ஆண்கள், 2579 பேர் பெண்கள் மற்றும் 2 பேர் திருநங்கையர் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் நேற்று பதிவான 798 நோய் தொற்றுகளில் 514 பேர் ஆண்களும், 287 பேர் பெண்களும் ஆவர். சென்னையில் பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 4,371-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 2,206 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகப்படியாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை பதிவாகியுள்ளன.
நேற்று புதிதாக 1,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அம்மாநிலத்தில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 23,401-ஆக உயர்ந்துள்ளது. 36-பேர் நேற்று இறந்ததால், உயிரிழப்புகள் எண்ணிக்கையும் 868-ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் துவங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.