Home நிகழ்வுகள் தமிழகம் தமிழகத்தில் 8,718 ஆக உயர்ந்தது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 8,718 ஆக உயர்ந்தது கொரோனா பாதிப்பு

293
0
தமிழகத்தில் 8,718 ஆக உயர்ந்தது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 8,718 ஆக உயர்ந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. நேற்று ஒரே நாளில் 716 புதிய நோய் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாடு: நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 716 புதிய நோய் தொற்றுகள் பதிவானதால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா நோய் தொற்றுக்கு நேற்று தமிழ்நாட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை நோய் தொற்றிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 510 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் குணமாய்ந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. நேற்று 83 பேர் மட்டுமே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் 2,134 பேர் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

6,520 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா பாதித்தவர்களில் 5,848 பேர் ஆண்கள், 2,867 பேர் பெண்கள், 3 பேர் திருநங்கையர் ஆவர்.

நேற்று ஒரே நாளில் 11,788 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் அரசு 38 மற்றும் தனியார் 17 என மொத்தம் 55 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

உலகெங்கும் பரவி பல உயிர்களை பலிகொண்டுவரும் கொரோனா நோய் தொற்றிற்கு இதுவரை அதிகாரப்பூர்வ தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. உலக நாடுகள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதுடன், கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனிடையே நேற்று மாலை பிரதமர் தொலைக்காட்சி வாயிலாக மக்களுடன் உரையாடினார்.

இந்த உரையாடலின்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சிலவற்றை அவர் தெரிவித்தார். இதுவரை இல்லாத அளவில் உலகம் பேரிழப்புகளை சந்தித்துவருகிறது. கொரோனாவுடனான போரில் நாம் தோற்றுபோகவில்லை என்று கூறினார்.

Previous article13/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next article20-லட்சம் கோடியில் பிரதமர் அறிவித்த சிறப்பு திட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here