சென்னை: சீனாவிலிருந்து இன்று காலை 24,000 ராபிட் டெஸ்டிங் கிட் எனப்படும் கொரோனா பாதிப்பை 30 நிமிடத்தில் உறுதி செய்யக்கூடிய கருவிகள் வந்தடைந்தது.
24,000 ராபிட் டெஸ்டிங் கிட் (Rapid Testing Kit) தமிழகம் வந்தடைந்தது
சில நாட்கள் தாமதத்திற்க்கு பிறகு சீனா இதை வியாழக்கிழமை இந்தியாவிற்க்கு அனுப்பிவைத்திருக்கிறது.
முதலில் 3,00,000 கருவிகள் வியாழக்கிழமை அன்று டெல்லி வந்தடைந்தது.பிறகு 24,000 கருவிகள் விமானம் மூலம் சென்னை வந்தது.
அடுத்த சில வாரங்களில் தமிழ்நாட்டிற்க்கு மேலும் 3,75,000 எண்ணிக்கையிலான கருவிகள் சீனாவிலிருந்து வந்தடையும் என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக(TNMSC) அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்திய மற்றும் தமிழக நிறுவனங்களும் இத்தகைய கருவிகளை உற்பத்தி செய்தால் மேலும் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு பரிசோதனைகளை செய்யமுடியும் என எதிர் பார்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கொரோனோவால் பாதிப்படைந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரொனா பாதிப்பு பரிசோதனை செய்யப்படும்
மற்றும் இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கும் இப்பரிசோதனை செய்யப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள பாலிமெரஸ் செயின் ரியாக்சன்(PCR)படி கொரோனா பரிசோதனை செய்ய 5 மணி நேரம் ஆகும் எனவும்
இந்த ராபிட் டெஸ்ட் கருவிகள் மூலமாக மேலும் எளிமையாக மற்றும் அதிக பாதுகாப்பான முறையில் 30 நிமிடத்தில் பரிசோதனையை செய்து முடிக்கலாம் என மூத்த வைரஸ் ஆராய்ச்சியாளர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டது.