Home நிகழ்வுகள் தமிழகம் கருணாநிதியும் ஸ்டாலினும் ஒண்ணா? – வைரமுத்து ஆவேசம்

கருணாநிதியும் ஸ்டாலினும் ஒண்ணா? – வைரமுத்து ஆவேசம்

344
0
கருணாநிதியும் ஸ்டாலினும் ஒண்ணா? வைரமுத்து ஆவேசம்

கருணாநிதியும் ஸ்டாலினும் ஒண்ணா? இருவரையும் ஏன் ஒன்றாக ஒப்பிட்டு பேசுகின்றீர்கள் என வைரமுத்து ஆவேசம் கலந்து பேசியுள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை விழா சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பாரி முனை, ராஜா அண்ணாமலை அரங்கத்தில் கொண்டாடப்பட்டது.

இதில் கலந்துகொண்ட வைரமுத்து திமுக வளர்ந்து வந்த பாதை குறித்தும், கருணாநிதி எப்படி திமுகவை வழி நடத்துகிறார். ஸ்டாலின் எப்படி வழி நடத்துகிறார் என்பது குறித்து பேசினார்.

கருணாநிதியும் ஸ்டாலினும் ஒண்ணா?

கருணாநிதியும் ஸ்டாலினும் ஒண்ணா. இருவரும் வெவ்வேறு சிகரங்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது தவறு.

ரோஜா பூவுடன் மல்லிகை பூவையோ சாமந்தி பூவையோ, தாமரை பூவையோ ஒப்பிட முடியாது. ஏன் ரோஜா பூவுடன் இன்னொரு ரோஜா பூவை ஒப்பிட முடியாது.

அந்த ரோஜாவே வேறு. அது பிறந்த சூழல் வேறு, மலர்ந்த சூழல் வேறு. மற்றொரு ரோஜா பிறந்த சூழல் வேறு வளர்ந்த சூழல் வேறு. எனவே இரண்டையும் ஒப்பிட முடியாது.

அதேபோன்றே கலைஞரும் ஸ்டாலினும். இருவரும் வெவ்வேறு சிகரங்கள். இருவரின் காலகட்டங்கள் வேறு வேறு.

கலைஞர் காலத்தில் ஆரியமும் ஹிந்தியும் தான் எதிரிகள். இன்று காலம் மாறி உள்ளது. தமிழகம் பல கூறாக துண்டாடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here