சென்னைக்கு மீண்டும் நிலநடுக்க அபாயம்? ஒரே இடத்தில் 4 முறை ஏற்பட்டுள்ளது!
சென்னைக்கும் அந்தமானுக்கு இடையில் உள்ள வங்கக்கடல் பகுதியில் இன்று காலை 7 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதேவேளை சென்னை தி.நகர் பகுதியில் நள்ளிரவு 1:30 மணிக்கே லேசான நில அதிர்வு ஏற்பட்டதை அங்குள்ள மக்கள் உணர்ந்துள்ளனர்.
திடிரென இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலர் அதிர்ச்சியில் உள்ளனர். அதேவேளை இந்த நிலநடுக்கம் தொடர்பாக பல்வேறு வதந்திகளும் பரவியுள்ளது.
அதாவது மீண்டும் நிலநடுக்க அபாயம் உள்ளது. சுனாமி வரவும் வாய்ப்பு உள்ளது என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியுள்ளன.
இதனால் வெளியூரில் வசிக்கும் சொந்த பந்தங்கள் அச்சமடைந்து உள்ளனர். வெளியூர் வாசிகள் அதிகம் சென்னையில் வசிப்பதால் தமிழகம் முழுவதும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் நிலநடுக்கம் வருமா?
இந்த நிலநடுக்கம் 4.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதற்குமுன் மூன்று முறை அதே பகுதியில் அருகருகே ஏற்பட்டு உள்ளது.
1999, 2006, 2007 மற்றும் 2019 இதுவரை நான்கு முறை அதே பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது.
ஆனால் இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை. ஒருவேளை வரும் ஆண்டுகளில், மீண்டும் அதேபகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சென்னைக்கு பெரிய பாதிப்பு இருக்காது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் புதிதாக கட்டிடம் கட்டுபவர்கள் நிலநடுக்கத்தை தாங்கும் அளவிற்கு கட்டிடங்களை வலுவாக கட்டுவதே நல்லது.