Home நிகழ்வுகள் தமிழகம் பானி புயல்: ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது; வெயில் கொளுத்தும்

பானி புயல்: ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது; வெயில் கொளுத்தும்

3190
0
பானி புயல்

பானி புயல் உருவாகிவிட்டது. இது ஒரு விசித்திரமான புயலாக உள்ளது. இந்தப் புயல் தற்பொழுது 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு உள்ளது.

முதலில் பானி புயல் இலங்கையை ஒட்டி நகர்ந்து பாண்டிச்சேரி வழியாக சென்னை நோக்கி நகர்ந்து ஆந்திராவில் வலுவிழக்கும் எனக் கணிக்கப்பட்டது.

அதன்பிறகு இந்த புயல் தமிழக கடற்கரையை ஒட்டியே சென்று ஆந்திராவில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டது.

தற்போதைய நகர்வின்படி ஃபானி புயல் இந்திய வங்கக் கடற்கரையை ஒட்டியே சென்று பங்களாதேஷ் நாட்டில் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

அதாவது 5 மணி நேரங்களுக்கு ஒரு முறை புயலின் நகர்வில் மாறுபாடு காணப்பட்டு வருகிறது.

இதே நிலை நீடித்தால் இந்தப் புயலால் தமிழகத்தில் ஒரு சொட்டு மழை கூட பெய்ய வாய்ப்பில்லை.

தமிழகத்தில் இருக்கும் மேகக்கூட்டத்தையும் தன்னுள்ளே இழுத்துக்கொண்டு வங்கக்கடலில் மழையைக் கொட்டித் தீர்த்துவிடும்.

மேலும் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிக்கொள்ளும். இதனால் அதிகப்படியான வெயில் தமிழகத்தை அடுத்த சில நாட்களுக்கு வாட்டிவதைக்கும்.

பெயர் தான் பானி. ஆனால் இப்புயலால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்க வாய்பில்லை.

வடகிழக்கு திசை நோக்கி நகரும் புயல் வடமேற்கு நோக்கி நகர்ந்தால் மட்டுமே மழைக்கு வாய்ப்பு உண்டு.

Fani Cyclone Live Tracking Map | TamilNadu Storm Map

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here