அதிமுக அரசு மெஜாரிட்டியாக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தாலும், உட்கட்சி பூசலால் நாளுக்கு நாள் மைனாரிட்டி அரசாக மாறிக்கொண்டே உள்ளது.
ஆட்சியை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்கிற முனைப்பில் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு குறுக்குவழிகளை கையாண்டு வருகிறார்.
தனக்கு எதிராக செயல்படும் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சித்துக்கொண்டே உள்ளார்.
ஏற்கனவே 18 எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டு அதற்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதன்பிறகும் ஆட்சியைப் பிடிப்பது கடினாமாகி உள்ளது.
எனவே மேலும் 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார் எடப்பாடி.
இதனால் கடுப்பான ஸ்டாலின் புது திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். இதன்பிறகு எந்த ஒரு எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டால் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது என முடிவு செய்துள்ளார்.
2016 ஜூலை 16-ல் உச்சநீதிமன்ற நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது.
அத்தீர்ப்பின்படி, ஒரு சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் நிலுவையில் உள்ள போது அவர் அவையில் உள்ள எந்த எம்எல்ஏவையும் நீக்க முடியாது எனக் கூறியுள்ளது.
நம்பிக்கை இல்லாத்தீர்மானத்தில் வெற்றி பெற்ற பின்னரே தகுதி நீக்கம் செய்ய முடியும். தோல்வியுற்றால் சபாநாயகர் பதவியே பறிபோய்விடும்.
எனவே ஸ்டாலின் இந்த எதிர்பாராத மூவ்வை கண்டு அதிமுக தலைமை கொஞ்சம் நடுக்கத்தில் உள்ளதாம்.