சென்னை: தமிழ்நாட்டில் புதன் கிழமை மட்டும் 2,865 கொரோனா தொற்றுகள் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 67,468 ஆக உள்ளது.
புதன் கிழமை 33 பேர் கொரோனாவால் இறந்ததை அடுத்து மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 866 ஆக உள்ளது.
தமிழ் நாட்டில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 28,836 ஆக உள்ளது.
1,654 புதிய தொற்றுகளுடன் சென்னை முதலிடம்
1,654 புதிய தொற்றுகளுடன் சென்னை முதலிடத்தில் உள்ளது. செங்கல்பட்டு(131), காஞ்சிபுரம்(66), திருவள்ளூர்(87), ஆகிய மாவட்டங்கள் ஒன்றாக சேர்ந்து 284 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டது.
மதுரையின் ஊரடங்கு முதல் நாளில் 97 தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டன மற்றும் அங்கு கொரோனா தொற்று 1,000த்தையும் தாண்டி 1,073 ஆக உள்ளது.
மற்ற மாவட்டங்களில் கொரோனா
நாகபட்டிணத்தில் 62 தொற்றுகளும், சேலத்தில் 55 தொற்றுகளும், திருச்சியில் 75 தொற்றுகளும், வேலூரில் 51 தொற்றுகளும் மற்றும் திருவண்ணாமலையில் 54 தொற்றுகளும் உறுதி செய்யப்பட்டன.