ஜெமினி மேம்பாலம் குண்டுவெடிப்பு; சென்னையில் பதற்றம்
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஜெமினி மேம்பாலத்தின் கீழ் சென்ற காரின் மீது நாட்டு வெடி குண்டை எரிந்துவிட்டு தப்பி ஓடினர். அது தரையின் கீழே விழுந்து வெடித்தது.
பெரிதும் சேதம் எதுவும் இல்லை. இருந்தாலும் அதை சுற்றிய பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் இரண்டாவது முறை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகில் நாட்டு வெடி வீசப்பட்டது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இன்று மாலை நான்கு மணியளவில் ஜெமினி பாலத்தின் இறக்கத்தில் சென்ற ஒரு காரை துரத்திக்கொண்டு மோட்டோர் சைக்கிளில் வந்தவர்கள் அதன் மீது குண்டு எரிந்துள்ளனர்.
அக்கம் பக்கத்தில் விசாரித்த பிறகு எந்த கார்மீது குண்டு வீசினார்களோ அந்தக்காரும் தப்பிச் சென்றுவிட்டது. காரை துரத்திக்கொண்டு வந்தவர்கள் காரில் உள்ளவர்கள்மீது வெடிகுண்டு வீசி கொல்லும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கலாம் இது வேறு எதுவும் காரணத்தோடு நடந்ததாக தெரியவில்லை எனவும் கூறியுள்ளனர்.