Home நிகழ்வுகள் தமிழகம் சென்னை பாம்பு பூங்காவில் கரியல் முதலை 24 குட்டிகளை ஈன்றது

சென்னை பாம்பு பூங்காவில் கரியல் முதலை 24 குட்டிகளை ஈன்றது

பாம்பு பூங்காவில்

சென்னை: மே 26இல் பாம்பு பூங்காவில் உள்ள ஒரு பெண் கரியல் முதலையின் 24 முட்டைகளிலிருந்து குட்டிகள் வெளிவந்திருக்கின்றன. இத்தனை குட்டிகள் வெளிவருவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

24 குட்டிகள் வெளிவந்தன

பூங்காவின் நிர்வாகத் தலைவர் அந்த பெண் முதலையின் 30 முட்டைகளை நாங்கள் அடைகாத்தல் கருவியில் இயற்கையான சூழ்நிலையில் வைத்திருந்துதோம் அதிலிருந்து 24 குட்டிகள் வெளிவந்துள்ளன என தெரிவித்தார்.

பிறகு அந்த குட்டிகள் தனிமைபடுத்தப்பட்டு விலங்குகள் மருத்துவரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

உயிர் மீன்கள் உணவு

குட்டி முதலைகளை வளர்க்க தற்போது உயிருடன் உள்ள மீன்கள் உணவாக வழங்கப்பட்டு வருகிறது என பால்ராஜ் தெரிவித்தார்.

நன்கொடையாளர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் முன்வந்து நகரத்தின் முதல் நீர்-நில வாழ்வியல் மையமான இந்த பூங்காவிற்கு நன்கொடை வழங்கவேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

ஒடிசாவில் இருந்து கொண்டுவரப்பட்ட முதலை வகை

இந்த விதமான முதலை ஒடிசாவில் இருக்கும் நந்தன் கண்ணன் விலங்கியல் பூங்காவில் இருந்து 1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டவை ஆகும்.

இந்திய நிலபரப்பில் மட்டுமே வாழும் மற்றும் அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த வகையான முதலைகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களுள் ஒன்றாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here