Home சினிமா கோலிவுட் இன்னொரு அப்பா மறைவு: துடி துடித்துப்போன இலியானா!

இன்னொரு அப்பா மறைவு: துடி துடித்துப்போன இலியானா!

536
0
Ileana D Cruz

Ileana; இன்னொரு அப்பா மறைவு: துடி துடித்துப்போன இலியானா! இன்னொரு அப்பா போன்ற மாமா மறைவால் நடிகை இலியானா துடிதுடித்துப் போன சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இலியானாவின் மாமா இறந்ததை தாங்க முடியாமல் இன்னும் நினைத்து வாடுவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தமிழில் கேடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இலியானா. இப்படத்தைத் தொடர்ந்து நண்பன் என்ற ஒரே ஒரு படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்தார்.

அதன் பிறகு தமிழில் எந்தப் படங்களிலும் இலியானா நடிக்கவில்லை. மாறாக ஹிந்தியில் கொடி கட்டிப் பறந்தார். தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ஒருசில படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், அண்மையில், அவரது மாமா இறப்புக்கு இரங்கல் தெரிவித்த செய்தியை கண்ணீர் துளிகளாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அண்மையில், இலியானாவின் மாமா மரணமடைந்தார். அவரது இறப்பு ரொம்பவே இலியானாவை பாதித்துள்ளது.

இறந்த மாமாவை தன்னுடைய தந்தை போன்றவர் என்று குறிப்பிட்டு அவரது வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மன வேதனையை பதிவிட்டுள்ளார்.

நான் உங்கள்து வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆடியோக்களை வைத்திருக்கிறேன். நீங்கள் மறைந்துவிட்டீர்கள் என்று எனது இதயம் நம்பவில்லை. எனக்கு எப்போதும் அற்புதமான, இனிமையான மனிதராகவே நீங்கள் இருந்தீர்கள்.

என்னைப் பொறுத்தவை உங்களது மறைவு வேதனையானது என்று பதிவிட்டுள்ளார்.

SOURCER SIVAKUMAR
Previous articleஇன்று 234; நாளை 500-ஐ தொடும்: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் புல் லிஸ்ட்
Next articleஜோஸ் பட்லர் தனது உலகக்கோப்பை ஜெர்ஸியை ஏலத்தில் விட காரணம் என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here